மதுரையின் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியல்… பாஜகவுக்கு எத்தனை தொகுதி… வெளியான ரகசிய தகவல்…

0
Follow on Google News

தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்க, கூட்டணி காட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து தீவிரம் காட்டி வருகிறது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 15 தொகுதிகள் வரை ஒதுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, குறிப்பாக வடமாவட்டம் மற்றும் சென்னை போன்ற பகுதியிலே பாமகவுக்கு சீட் ஒதுக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் தென் மாவட்ட தலைநகரான மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கும் எத்தனை தொகுதி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளரை யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. மதுரையில் உள்ள பத்து சட்டசபை தொகுதியில் பாஜகவுக்கு ஒரு தொகுதி, தென் இந்திய பாராவார்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி, மேலும் தொடர்ந்து டிடிவி தினகரன் உடன் பாஜக பேசி வரும் நிலையில் டிடிவி தினகரன் கூட்டணிக்குள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அவருடைய அமமுக கட்சிக்கு ஒரு தொகுதி என கூட்டணி கட்சிக்கு மொத்தம் 3 தொகுதிகளும், அதிமுக 7 தொகுதிகளிலும் மதுரையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருமங்கலம் தொகுதியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியிலும், ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியிலும் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, அடுத்ததாக மதுரை உசிலப்பட்டி தொகுதியில் முன்னாள் அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு அதிமுக சீட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் மகேந்திரன் உசிலம்பட்டி தொகுதியில் தனக்கென தனி செல்வாக்கு படைத்த நபராக இருந்து வருகிறது, அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் விலகி தனி கட்சி தொடங்கியதும் அமமுகவில் இருந்த மகேந்திரன், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அமமுக சார்பில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட்டு சுமார் 55 ஆயிரம் வாக்குகளை பெற்றார், இவருக்கும் இரண்டாம் இடம் பிடித்த திமுக கூட்டணி வேட்பாளருக்கும் இடையில் வெறும் 3 சதவிகித வாக்கு தான் வித்தியாசம் , மேலும் இது மகேந்திரன் தனி செல்வாக்குக்காகவே பெற்ற வாக்கு என்று சொல்லும் அளவுக்கு உசிலம்பட்டி தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்து வரும் மகேந்திரன் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டது குறிப்பாக உசிலம்பட்டி தொகுதியில் அதிமுகவுக்கு கூடுதல் பலமாக உள்ளது. அந்த வகையில் அதிமுக சார்பில் மகேந்திரன் உசிலம்பட்டியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோழவந்தான் தொகுதியில் முன்னாள் அதிமுக எம் எல் ஏ மாணிக்கதிற்கு சீட் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, மதுரை கிழக்கு தொகுதியில் முன்னாள் அதிமுக எம் எல் ஏ தமிழரசுக்கு சீட் கிடைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி கட்சியான தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் க்கு மதுரையில் ஒதுக்கப்பட இருக்கும் ஒரு தொகுதியில் அந்த கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மதுரை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்க இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்ததாக இருக்கும் சௌராஷ்ட்ரா சமூகத்தை சேர்ந்த ஒருவர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மதுரையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட இருக்கும் வேட்ப்பாளர்கள் தேர்தல் பணியில் ஆயத்தமாகி வருவதை பார்க்க முடிகிறது.

error: Content is protected !!