விவசாயிகளையும் விட்டு வைக்காத திமுக… கரும்புக்கு கமிஷன்… கண் கலங்கும் விவசாயிகள்..

0
Follow on Google News

இதற்கு முன்பு எதிர்க்கட்சியாக திமுக இருந்த போது, விவசாயிகளுக்கு எதிரான அரசு மோடி அரசு, விவசாயிகளுக்கு எதிரான அரசு மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு என பிரச்சாரம் செய்து, நாங்கள் தான் விவசாயிகளின் பாதுகாவலன் என விவசாய பெருமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தா திமுக ஆட்சியில் விவசாயிகள் படும் அவலம் கண் கலங்க வைக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளுக்கு அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என வாக்குறுதிகளை அள்ளி தெளித்த திமுக , ஆட்சிக்கு வந்த பின்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளி தவிக்க விட்டு கொண்டிருக்கிறது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் மோஹனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன்பு 2021 தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த போன்று ஒரு டன் கரும்புக்கு 4,000 ரூபாய் கொடுக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்பொழுது ஒரு டன் கரும்புக்கு 3,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருவது, மத்திய அரசு நிர்ணயித்துள்ள 3,550 ரூபாய் FRP விலையை விடவும் குறைவானது என்பதே விவசாயிகளின் கடும் கோபத்திற்கு காரணமாக அமைத்துள்ளது. இதே போன்று ஜனவரி 6ஆம் தேதி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில், பொங்கல் பரிசுத் தொகுப்பிற்காக கரும்பு வழங்கிய விவசாயிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

அரசு நிர்ணயித்த கொள்முதல் விலை ஒரு கரும்புக்கு 38 ரூபாய் என அறிவிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து, கூலி உள்ளிட்ட பிடித்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு கிடைத்தது 25 ரூபாய் மட்டுமே. இதனால், ஒரு கரும்புக்கு 13 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திறந்த சந்தையில் கரும்பு விலை 38 முதல் 40 ரூபாய் வரை இருந்த நிலையில், அரசு கொள்முதல் விவசாயிகளுக்கு முழுமையான நஷ்டமாக மாறியுள்ளது என விவசாயிகள் கண் கலங்குகிறார்.

சுமார் 67 விவசாயிகள், 1,100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு கரும்பு வழங்கிய நிலையில், ஒரு கரும்புக்கு குறைந்தபட்சம் 30 ரூபாய் நிகர விலை நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில் இதையாவது இந்த திமுக அரசு நிறைவேற்றுமா என்கிற கேள்வி குறி எழுந்துள்ளது.

இதே போன்று ஜனவரி 6ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், கரும்பு ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவு அதிகாரிகள், 4,000 கரும்புக்கு 400 கரும்புகளை இலவசமாக கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியதாக விவசாயிகள் குற்றம்சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிக கமிஷன் வழங்குபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், லஞ்சம் கொடுத்தால்தான் கொள்முதல் நடக்கிறது எனவும் புகார் தெரிவித்தனர். விவசாயிகளை பாதுகாப்போம், லாபகரமான விலை வழங்குவோம், வேளாண்மையை ஆட்சியின் மையமாக வைத்திருப்போம் என வாக்குறுதி அளித்து ஆட்சி அமைத்த திமுக, இன்று விவசாயிகளை நம்ப வைத்து முதுகில் குத்துவது போன்று ஏமாற்றி விட்டது என கண்கலங்கி வருகிறார்கள் விவசாயிகள்.

திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது, அதாவது வெறும் 13 சதவீதம் மட்டுமே நிறைவேற்றி இருக்கும் திமுக அரசுக்கு எதிராக தமிழக விவசாயிகளின் போராட்டம் வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் பறவையாளர்கள்.