தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்வதில் தீவிரம் காட்டி கொண்டிருக்கும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியை உறுதி செய்யாமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார் பிரேமலதா விஜயகாந்த் என எதிர்பார்த்த நிலையில் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிரேமலதா வெளியிடவில்லை.
இந்நிலையில் தேமுதிக நிலைப்பாடு என்ன என்பது குறித்து சில தகவல் வெளியாகியுள்ளது, திமுக – அதிமுக – தவெக ஆகிய மூன்று கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி குறித்து பேசி வருகிறது தேமுதிக என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதில் திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளில் ஒரு கட்சிக்கு செல்வது குறித்து தொடர்ந்து தேமுதிக பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாமல் இருப்பதற்கு பின்னணி குறித்த சில தகவல் வெளியாகி உள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால், திமுகவிடம் அதிக டிமாண்ட் வைக்கலாம் என கணக்கு போடும் தேமுதிக, அந்த வகையில் தற்பொழுது திமுக – காங்கிரஸ் இடையிலான உரசல் அதிகரித்து கொண்டிருக்கையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என நம்புகிறது தேமுதிக, மேலும் அதிமுக கூட்டணியில் பாஜக , பாமக என வலுவான கட்சிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி திமுகவை விட்டு வெளியேறினால் திமுக பலம் இழந்து விடும்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இருந்த இடத்தை சரி செய்ய தேமுதிக போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு திமுக வரும், அப்போது ஒரு ராஜசபா சீட், மேலும் கேட்ட தொகுதி, தேர்தல் செலவுக்கான ஸ்வீட் பாக்ஸ் என அதிக டிமாண்ட் வைக்கலாம் என திமுக – அதிமுக இரண்டு தரப்பிலும் கூட்டணி குறித்து பேசி வந்தாலும் கூட கூட்டணியை உறுதி செய்யாமல் காலம் தாழ்தி வருகிறது தேமுதிக.
இந்நிலையில் இதுபோன்று தொடர்ந்து தேமுதிக இரண்டு பக்கமும் பேரம் பேசி வந்தால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் கூட்டணியில் சேர்க்காமல் கழட்டி விடுவதற்கு வாய்ப்பு உண்டு. காரணம் கடந்த காலத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டசபை தேர்தல், ஆகிய இரண்டு தேர்தலிலும் தேமுதிக இது போன்று இரண்டு கட்சிகளிடம் கூட்டணி பேரம் பேசி கால தாமதம் செய்து வந்ததின் விளைவு இதில் திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க வில்லை.
இதில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் புகைடபடத்துடன் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்வில் கடைசி நேரத்தில் தேமுதிக தரப்பில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனை தொடர்ந்து திமுக பக்கம் செல்ல அங்கே திமுக மூத்த தலைவர் எங்களிடம் கொடுப்பதற்கு தொகுதி இல்லை, நீங்க ரெம்ப லேட் என கைவிரித்து விட்டார், இதாவது பரவாயில்லை தேமுதிக தரப்பில் இருந்து என்னிடம் பேச முயற்சித்தார்கள் நான் குளிக்க போகிறேன் இப்போது பேசமுடியாது என்று சொல்லிவிட்டேன் என துரைமுருகன் பேட்டியிலே தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.
அந்த வகையில் தற்பொழுது அதிமுக கூட்டணயை தேமுதிக விரைவில் இறுதி செய்து, வரும் 23ம் தேதி பிரதமர் மோடி வருவதற்குள் கூட்டணி தேமுதிக உறுதி செய்தால் அது தான் தேமுதிகவுக்கு வரும் சட்டசபை தேர்தலில் சில சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று கொடுக்கும், அல்லது கடந்த 2021 சட்டசபை தேர்தல் போன்று அதிமுக – திமுக இரண்டு கட்சிகளும் இறுதியில் கழட்டி விட்டது போன்று கழட்டி விட்டால் தேமுதிக நிலை மிக பரிதாபம் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

