திருப்பரங்குன்றம் கிரிவலம் வரும் மோடி… மலையை சுற்றி பலத்த பாதுகாப்பு… அட இது நம்ம லிஸ்டிலே இல்லையே…

0
Follow on Google News

வரும் ஜனவரி 23ம் தேதி மதுரை வருவதாக இருந்த பிரதமர் மோடியின் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு பதில் சென்னை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி மதுரை வருவதாக இருந்த நிலையில், அவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது, அந்த செய்தி உண்மை தான் என்பது தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவல் உறுதி படுத்துகிறது.

ஆனால் இதில் மிக பெரிய ட்விஸ்ட்டாக பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் மலையை சுற்றி காரில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டு இருந்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது திருப்பரங்குன்றம் கோவில் அர்ச் வழியாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு கார் மூலம் என்ட்ரி கொடுக்கும் பிரதமர் மோடி மயில் மண்டபம், 16 கால் மண்டபம் என சன்னதி தெரு வழியாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன் அவருடைய கார் வந்தடைய திட்டமிட பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து அங்கே காரின் நின்று கொண்டு திருப்பரங்குன்றம் மலையை சுற்றி ரோடு ஷோ நடத்த திட்டமிட பட்டிருக்கிறது. குறிப்பாக மலையை சுற்றி உள்ள ஒவ்வொரு குகை கோவில் முன் வாகனம் நிறுத்தப்பட்டு,வாகனத்தில் இருந்த படியே பிரதமர் மோடி சுவாமி வழிபாடு செய்ய திட்டமிட பட்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையை சுற்றி காரிலே ரோடு ஷோ மூலம் மக்களை பார்த்து காய் அசைத்து கொண்டே முருகன் கோவில் முன் பிரதமர் மோடியின் வாகனம் வந்தடைய திட்டமிட பட்டிருக்கிறது.

இதன் பின்பு வாகனத்தில் இரங்கி முருகன் கோவில் உள்ளே சென்று சுவாமி வழிபாடு செய்து பிரதமர் மோடி திரும்புவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இது குறித்த நிகழ்வுக்கு பிரதமர் மோடியும் ஓகே சொல்லி இருக்கிறார், ஆனால் மதுரையில் நடைபெற வேண்டிய கட்சி நிகழ்வு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடியின் மதுரை கட்சி நிகழ்ச்சின் தான் சென்னைக்கு மாற்றம் செய்யப்ட்டுள்ளதே தவிர திருப்பரங்குன்றம் முருகன் கோவில் விசிட்டில் மாற்றம் இல்லை ஆனால் தேதி மற்றுமே மாற்றம் செய்யப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது தற்பொழுது பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் பயணம் எப்படி திட்டமிடப்பட்டதோ அதே போன்று, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பு விழாவுக்கு மதுரை வரும் மோடி, அப்போது திட்டமிட்ட படி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு விசிட்டடித்து சுவாமி தரிசனம் செய்ய இருக்கிறார், அந்த வகையில் தேதி தான் மாற்றம் நிகழ்ந்துள்ளது தவிர, பிரதமரின் திருப்பரங்குன்றம் கோவில் விசிட்டில் எதிர்காலத்தில் நடக்க இருக்கிறது.

அதே நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு எதற்க்காக பிரதமர் பங்கேற்க இருந்த கட்சி நிகழ்வு மாற்றம் செய்யப்பட்டது என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது மதுரை பாண்டி கோவில் அருகே பிரதமரின் கட்சி நிகழ்ச்சிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது ஆனால்,நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே ஹெலிக்கப்பட்டார் இறங்குவதற்கான போதுமான பாதுகாப்பு வசதி இல்லை என்பதாலே சென்னைக்கு பிரதமர் மோடி வரும் நிகழ்வு மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இனிவரும் காலத்தில் எய்ம்ஸ் திருப்பு விழாவுக்கு விமானம் மூலம் மதுரை விமானம் நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிக்கப்பட்டார் மூலம் நேரடியாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமணையில் அமைய இருக்கும் ஹெலிக்கப்பட்டார் தளத்தில் இறங்குகிறார், அங்கெ எய்ம்ஸ் மருத்துவமனை திருப்புவிழாவில் பங்கேற்றுவிட்டு , அங்கிருந்த வாகனம் மூலம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்கிறார்.

முருகன் கோவிலில் முருகனை தரிசனம் செய்துவிட்டு, பின்பு எங்கிருந்து வாகனம் மூலம் நேரடியாகவே மதுரை விமானம் நிலையம் அல்லது எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அங்கிருந்து மீண்டும் ஹெலிக்கப்பட்டார் மூலம் மதுரை விமானம் நிலையம் செல்வார் என கூறப்படுகிறது.