திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் விவகாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், தற்பொழுது திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்து வருவது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மலை மீது உள்ள கள்ளத்தி மரத்தில் சந்தனக்கூடு விழாவிற்கான கொடி ஏற்றப்பட்டிருப்பது தொடர்ந்து அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் மலையேறிச் சென்றார், அப்போது நெல்லித்தோப்பு பகுதிக்குச் சென்ற எச் ராஜா அங்கே முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் தர்காவுக்கான சந்தனக்கூடு விழாவிற்கான கொடியை கலட்டப்படாமல் இருந்ததை எச். ராஜா பார்க்கிறார்.

நீதிமன்றம் அந்த கொடியை சமீபத்தில் கலட்ட வேண்டும் என்று உத்தரவிட்டும் இன்னும் ஏன் கலட்டவில்லை என்று போலீசாரிடம் கேள்வி எழுப்புகிறார். இந்த நிலையில் அடையாளம் தெரியிற நபர்கள் கள்ளத்தி மரத்தில் கொடியேற்றியதாக போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது. ஆனால் அந்த கள்ளத்தி மரத்தில் கொடி ஏற்றப்படும் பொழுது போலீசார் பலத்த பாதுகாப்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கள்ளத்தி மரம் ஸ்தல விருட்சம் ஆகையால் நான் அங்கே சென்று வழிபட போகிறேன் என்று எச் ராஜா கள்ளத்தி மரத்தை நோக்கி நகரும் பொழுது போலீசார் தடுத்து நிறுத்துகிறார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் நடைபெறுகிறது. குறிப்பாக இந்து அறநிலை துறைக்கு சொந்தமான சொந்தமான கள்ளத்தி மரத்தில் நான் ஏன் வழிபடக்கூடாது என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, அதற்கு காவல்துறை நீதிமன்றம் உத்தரவு அங்கே செல்லக்கூடாது என்கிறார்கள்.
அப்படியானால் ஆர்டரை காமிங்க என எச். ராஜா கேட்க போலீசார் சற்று நேரம் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி போனார்கள். இப்படி வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிலையில் அங்கே மேல உள்ளே தர்காவிற்கு வழிபடுவதற்காக இஸ்லாமிய பெண்கள் வருகிறார்கள், அங்கே மாவட்ட தலைவர் சிவலிங்கம் அந்தப் பெண்களை தர்காவிற்கு செல்வதற்காக வழி வகுத்து கொடுக்கிறார்.
தொடர்ந்து கடும் வாக்குவாதத்திற்கு மத்தியில் காவல்துறை உயர் அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். அப்போது எச் ராஜா மற்றும் சிவலிங்கம் இருவருக்கு மட்டும் கள்ளத்தி மரம் மற்றும் கார்த்திகை தீபத்துனை பார்வையிடுவதற்கு அனுமதி தருகிறார்கள், இதனை தொடர்ந்து இருவரும் கள்ளத்தி மரம் மற்றும் கார்த்திகை தீப துணை பார்வையிட்டு கீழே இறங்கும் பொழுது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக எச். ராஜாவை கைது செய்கிறோம் என்று போலீசார் தெரிவிக்க,
ஆர்டர் எங்கே என்று எச். ராஜா கேட்க , ஆர்டர் காப்பியும் இல்லை , எச் ராஜாவை கைது செய்யப் போகிறார்கள் போலீசார் என்றதும் அந்த பகுதி பெண்கள் கொந்தளித்து எச். ராஜாவை கைது செய்ய வந்த போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார்கள், எங்களை மீறி ஹெச். ராஜாவை கைது செய்யுங்கள் என பெண்கள் கூச்சலிட்டார்கள் .
இதனைத் தொடர்ந்து தாய்மார்களின் போராட்டத்தை தொடர்ந்து பணிந்த காவல்துறை எச். ராஜாவை கைது செய்வதை கைவிட்டு எச். ராஜா மற்றும் அவருடன் வந்த பாஜக நிர்வாகிகளின் விவரங்களை மற்றும் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து எங்களுக்காக குரல் கொடுக்கும் ஹெச் ராஜாவுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என அங்கே போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் தெரிவித்தனர்.

