சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கையில் சிறு சிறு கட்சிகள் கூட்டணியை உறுதிப்படுத்துவதில் தள்ளாடி கொண்டிருக்கிறது அந்த வகையில் தேமுதிக ராமதாஸ் மற்றும் ஓபிஎஸ் இவர்களுடைய மூவரின் நிலைமை ஊசலாடிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதில் சமீபத்தில் நடந்த தேமுதிக கடலூர் பொதுக்கூட்டத்தில் தன்னுடைய கூட்டணியை உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூட்டணியை உறுதி படுத்தவில்லை, இதன் பின்னணியில், திமுக – அதிமுக இரண்டு தரப்பிடமும் பிரேமலதா பேசி வருவதாகவும், இதில் திமுக தரப்பு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டால் உங்களை சேர்த்துக் கொள்கிறோம் என்று அதுவரை பொறுத்திருங்கள் என்று ஒரே போடா போட்டு விட்டதால் கூட்டணியை அறிவிக்காமல் தாமதம் செய்து வருகிறார் பிரேமலதா.

இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் சென்று இருக்கிறது, அந்த வகையில் கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இடமில்லை என்று எடப்பாடி பக்கம் வந்தால் எடப்பாடி சேர்த்துக் கொள்வாரா என்பதும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது.
டிடிவி தினகரன் வேண்டுமானால் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தங்களுடைய நிலைப்பாட்டை அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறார். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவது உறுதியாகி இருக்கிறது. அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் இடமில்லை என்பதும் உறுதியாக இருக்கிறது.
இதனை தொடர்ந்து திமுக – தவெக இரண்டு தரப்பிலையும் பேசி வரும் பன்னீர்செல்வம் திமுக பக்கம் சென்றால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகலாம் மேலும் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் தமக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்கின்ற ஒரு திட்டத்துடன் இருக்கிறார், அதே நேரத்தில் தவெக பக்கம் சென்றால் தற்போது கைவசம் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பரி போய்விடும் .
மேலும் தன்னுடைய அரசியல் வாழ்க்கையும் அஸ்தவமாகிவிடும் என்கின்ற அச்சம் ஓ பன்னீர்செல்வத்திற்கு இருந்து வருகிறது, அந்த வகையில் தொடர்ந்து முதல்வர் மு க ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ஓ பன்னீர்செல்வம், தங்கள் ஆதரவாளர்களுக்கு எட்டு தொகுதி வேண்டும் என்று கேட்டிருக்கிறார், ஆனால் முதல்வர் மு க ஸ்டாலினோ ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரு தொகுதி வைத்தியலிங்கத்துக்கு ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளை கொடுக்கிறோம், உங்கள் ஆதரவாளர்களை அழைத்து வந்து திமுகவில் இணைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரே போடாக போட்டு விட்டார் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து ஷாக் ஆன ஓபிஎஸ் என்ன இப்படி சொல்றீங்க என்று முதல்வரிடம் பரிதாபத்துடன் கேட்டிருக்கிறார். அதற்கு உங்க பக்கம் வைத்தியலிங்கம் தவிர வேறு யாரு இருக்கா மருது அழகுராஜ் முதல் கொண்டு எங்க பக்கம் வந்துட்டார், நீங்களும் வந்து விடுங்க உங்களுக்கு ஒரு தொகுதி, வைத்தியலிங்கத்துக்கு ஒரு தொகுதி, உங்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கிறோம் என்று ஒரு மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் பன்னீர்செல்வம் மற்றும் இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் எடப்பாடி பழனிச்சாமியை மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது, காரணம் ஓ பன்னீர்செல்வம் திமுக பக்கம் சென்று விட்டால் பாஜக அடுத்தடுத்து ஓ பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவிற்கு கொண்டு வர வேண்டும் என்கின்ற அழுத்தத்தை தம்மிடம் கொடுக்காது, ஆகையால் ஓ பன்னீர்செல்வம் திமுக பக்கம் போக இருப்பது மிக பெரிய மகிழ்ச்சியை எடப்பாடிக்கு கொடுத்து இருக்கிறது.

