மதுரை அரசு மருத்துவமனைக்கு 5.5 கோடி… 11 மாவட்ட மாவட்ட மக்கள் பயன்… மதுரை மக்கள் கொண்டாடும் AR மஹாலக்ஷ்மி…

0
Follow on Google News

தமிழக பாஜகவில் தமிழிசை சௌந்தர் ராஜன், வானதி சீனிவாசன் போன்ற ஆக சிறந்த பெண் அரசியல் தலைவர்களின் வரிசையில் அடுத்து முக்கிய பெண் தலைவராகவும், குறிப்பாக தென் தமிழகத்தில் பாஜகவின் மிக முக்கிய பெண் தலைவராக இருந்து வரும் A R மஹாலக்ஷ்மி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் , ஒரு சட்டமன்ற உறுப்பினர் செய்யவேண்டிய செய்யலை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மதுரையின் மக்களின் நலனுக்காக செய்த ஒரு செயல், மதுரை உட்பட அதை சுற்றியுள்ள 11 மாவட்ட ஏழை எளிய மக்கள் பலனடைந்து வருகிறார்.

கடந்த 2016 முதல் – 2020 வரை பாஜக மாநில மகளிர் அணி தலைவியாக AR மஹாலக்ஷ்மி இருந்த அதே காலகட்டத்தில், 2018 முதல் 2021 வரை பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தனி இயக்குனராக இருந்தார். அப்போது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மதுரை மக்கள் பலன் அடையும் விதத்தில், மதுரை மக்களுக்கு என்ன தேவை என்பதை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது மதுரை அரசு மருத்துவமனை டீன் , மதுரை அரசு மருத்துவமனைக்கு இருதய பரிசோதனை இயந்திரம் தேவை படுகிறது என தெரிவிக்க உடனே அதற்கான முயற்சியில் இறங்கிய அப்போது பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் தனி இயக்குனராக இருந்தா AR மஹாலக்ஷ்மி , CSR நிதியில் இருந்து 5.5 கோடி ரூபாய் மதிப்பில் மதுரை தெற்கு தொகுதியில் அமைத்துள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இருதய பரிசோதனை இயந்திரம் கொண்டு வந்துள்ளார்.

இதனால் மதுரை மற்றும் அதன் சுற்று பகுதியில் உள்ள சுமார் 11 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்று மிக பெரிய அளவில் பேசும் பொருளாக உள்ள திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப தூண் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பு, கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடம் கார்த்திகை தீப தினம் அன்று மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபம் ஏற்ற இந்து அமைப்புகளுடன் இணைந்து முயற்று பல முறை AR மஹாலஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பாஜக மாநில மகளிரணி தலைவராக இருந்த போது தமிழகம் முழுவதும் பெண்களை திரட்டி டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நடத்திய போராட்டம் தமிழகத்தை இஸ்தம்பிக்க வைத்தது, மேலும் கடந்த 2018ம் ஆண்டு மதுரை ஒதுக்கடையில் சுமார் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மகளிர் அணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி காட்டியவர் AR மஹாலக்ஷ்மி. இவர் மகளிர் அணி மாநில தலைவியாக இருந்த காலகட்டத்தில் தான் மிக பெரிய அளவில் பாஜகவில் மகளிர்கள் இணைந்தனர்.

குறிப்பாக அரசியலில் மிரட்டல், உருட்டல் என்பது நிச்சயம் இருக்கும், அதே போன்று மிரட்டல் தென் தமிழ்கத்தின் பாஜகவின் முக்கிய அரசியல் பெண் தலைவராகவும், மதுரை பாஜகவின் முகமாகவும் இருந்து வரும் AR மஹாலகஷ்மி அரசியல் வாழ்க்கையிலும் அரங்கேறியது. கடந்த சில வருடத்திற்கு முன்பு அவருடைய வீட்டில் முன்பு அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டத்தில் அவருடைய கார் தீ கறையானது, இருந்தும் அந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சி முடங்கி விடாமல் தொடர்ந்து மதுரை அரசியிலில் கோலாச்சி நின்று கொண்டிருக்கிறார் AR மஹாலக்ஷ்மி.

மதுரை தெற்கு தொகுதி மக்களிடம் மட்டுமின்றி கட்சி நிர்வாகி முதல் கட்சி தலைமை வரை நன்மதிப்பை பெற்றவராக இருந்து வரும் AR மஹாலக்ஷ்மி, தொடர்ந்து மதுரை தெற்கு தொகுதியில் நலிவடைந்த மக்களுக்கு உதவி செய்வதை சேவையாக, எந்த ஒரு விளம்பரமின்றி செய்து வரும் AR மஹாலக்ஷ்மி வரும் சட்டசபை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது அந்த தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.