உடையும் திமுக கோட்டை சென்னை… பக்கவா ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா… நேரடியா களம் இறங்கும் பிரதமர் மோடி…

0
Follow on Google News

பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி மதுரையில் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றத்திற்கான பின்னணி அரசியல் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது பாஜக – அதிமுக கூட்டணி உறுதியானதும் தென் மாவட்டங்களில் இந்த கூட்டணியை வலுவான கூட்டணியாகவே பார்க்க படுகிறது.

மேலும் தென் மாவட்டத்தில் அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளுக்குமே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிருந்தால் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்க முடியும் என்பதை இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகள் உணர்த்தியது. அந்த வகையில் தென் மாவட்டத்தில் அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளும் மீண்டும் இணைந்தது இந்த கூட்டணி தென் மாவட்டத்தில் வாழுவான கூட்டணியாகவே அமைந்துள்ளது.

மேலும் பாமக தற்பொழுது அதிமுக கூட்டணிய இணைந்துள்ளது வட மாவட்டங்களிலும் இந்த கூட்டணி வலுவாக அமைந்துள்ளது. மேலும் கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அதிமுக பாஜக கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்த நிலையில் ஏற்கனவே வலுவாக கூட்டணி பலத்துடன் இருக்கக்கூடிய மதுரையில் நடக்கும் மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தை நடத்துவதை விட தி மு க தங்களின் கோட்டை என்று கொக்கரித்துக் கொண்டிருக்க சென்னையில் நடத்தி தங்களுடைய கூட்டணி பலத்தை காண்பிக்க வேண்டும் என்கின்ற திட்டத்துடன் தான் கடைசி நேரத்தில் மதுரையில் நடைபெற இருந்த மோடியின் பொதுக்கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சென்னை எங்கள் கோட்டை என திமுக கொக்கரித்து கொண்டாலும், வரும் தேர்தலில் அந்த கோட்டையில் ஓட்டை விழுவது உறுதி என்கிறது சென்னை தேர்தல் களநிலவரம். காரணம் சென்னை மழை வெள்ளம், மாநகராட்சி நிர்வாக சீர்கேடு, திமுகவினரின் அடாதடி போன்றவை சென்னை மக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் மீது கடும் அதிருப்தி உள்ளதை பார்க்க முடிகிறது.

இப்படி மக்கள் மத்தியில் திமுக மீது இருக்கும் அதிருப்தி இருந்தாலும் கூட்டணி பலம், பண பலத்துடன் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும் என்கிற பகல் கனவு பலிக்காது என்று சொல்லும் வகையில், அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது போன்று இன்னும் தேமுதிக ஆகிய கட்சிகள் இணைவதற்கு தயாராகிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் திமுக கூட்டணி சல்லி சல்லியாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுகவிற்கு காங்கிரஸ் கொடுத்து வரும் நெருக்கடி காரணமாக திமுக கூட்டணியில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதால், மேலும் காங்கிரசை தொடர்ந்து விசிக இன்னும் சில காட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

இப்படி திமுக கூட்டணி வலுவிழந்து கொண்டிருக்கையில் மறுபக்கம் வரும் ஜனவரி 23ஆம் தேதி மோடி பங்கேற்கும் சென்னை கூட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணியில் பாமக உடன் இன்னும் பல கட்சிகள் கைகோர்க்க இருப்பதும், மேலும் கூட்டணியை ஒருபக்கம் வலுவாக கட்டமைக்கவும், மறுபக்கம் திமுகவுக்கு எதிரான வியூகத்தையும் வகுத்து மிக சதுர்யமாக அமித்ஷா காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.