தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கையில், திமுக காங்கிரஸ் இடையிலான உரசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குறிப்பாக காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று தொடர்ந்து திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து வருவதன் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாகவே தகவல் வெளியாகி உள்ளது.
ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் படியே திமுகவிற்கு இது போன்ற நெருக்கடியை தமிழகத்தில் உள்ள முக்கிய காங்கிரஸ் புள்ளிகள் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ராகுல் காந்தி தான் பின்னணியில் இருந்து இதுபோன்று பேச வைக்கிறார் என்பதை நன்கு அறிந்து கொண்ட முதல்வர் மு க ஸ்டாலின், திமுகவிடம் நெருக்கமாக இருக்கக்கூடிய காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸிடம் இது குறித்து பேசி இருக்கிறார்.

உடனே பீட்டர் அல்போன்சும் க்ரிஷ் சோடகனை தொடர்பு கொண்டு, தமிழகத்தில் காங்கிரஸ் முக்கிய புள்ளிகள், திமுகவிற்கு கொடுக்கும் நெருக்கடி குறித்து பேசியவர், இதெல்லாம் உங்களின் வழிகாட்டுதலின்படியே தான் நடக்கிறது. இதையெல்லாம் சற்று அடக்கி வைத்தால் கூட்டணிக்கு குழப்பம் வராது என்று பீட்டர் அல்போன்ஸ் கிரிஷ் சோதகனுடன் வலியுறுத்திருக்கிறார்.
அதற்கு கிறிஸ் சோடகன், நானாக எதுவும் செய்யவில்லை ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் படியே இதெல்லாம் நடக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னையும் ராகுல் காந்தி தான் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று பேட்டி கொடுக்க வைத்தார் என்றும் தெரிவித்திருக்கிறார், இதனைத் தொடர்ந்து கிறிஸ் சோடகனிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ் இந்த தகவலை முதல்வர் மு க ஸ்டாலின் இடமும் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆன ஐ பெரியசாமி, துரைமுருகன் ஆகியோருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின், தற்பொழுது விஜய் என்கின்ற ஒரு வாய்ப்பு இருப்பதால்தான் திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் விஜய் காங்கிரஸ் இருவரும் இணைந்து விட்டால் சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு கிடைக்காது என்று கூறுவதெல்லாம் மிகப்பெரிய அபத்தம்.
தேர்தல் களம் பாஜக – திமுக என்று தான் உள்ளது அந்த வகையில் சிறுபான்மையினர் வாக்கு விஜய்க்கு சென்று விட்டால் அது பாஜகவிற்கு சாதகம் என்பது அனைத்து சிறுபான்மையினர் மக்களுக்கு தெரியும், அதனால் திமுகவிற்கு தான் நிச்சயம் சிறுபான்மையினர் வாக்கு, ஆகையால் பயப்பட வேண்டாம் காங்கிரஸ் வெளியேறினால் வெளியேறட்டும் அதிகபட்சம் 28 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கலாம்.
அதை தவிர்த்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கின்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று திமுக முக்கிய தலைவர்களிடம் முதல்வர் மு க ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதன் பின்பே ஐ பெரியசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதை முதல்வர் உறுதியாக இருக்கிறார் என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் நீலகிரி வரும் ராகுல் காந்தி அங்கிருந்து கேரளா செல்கிறார், ஆனால் தமிழகம் வரும் ராகுல் காந்தியை இதுவரை திமுக முக்கிய புள்ளிகள் யாரும் சந்திப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தமிழகம் வரும் ராகுல் காந்தி திமுக முக்கிய தலைவர்களை சந்திப்பதை தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

