மகன்கள் முன்னணியில் இரண்டாவது திருமணம்… தனுஷின் இரண்டாவது மனைவி தயார்…

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு இருவரும் தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து கடந்த 4 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.இருவரும் சட்டப்படி விவாகரத்தும் பெற்றுள்ளார்கள்.

இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த போது இருவரும், ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து வந்ததாக அப்போது செய்திகள் வெளியான நிலையில், இவர்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு. மூன்று நாட்கள் வரை அதே நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் இருந்துவந்ததாக தகவல் அப்போது வெளியானது2022 ஆண்டு ஜனவரி 15,16,17 என தொடர்ந்து மூன்று நாட்கள் ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருந்து வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை கணவன் மனைவி இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளனர், ஏற்கனவே இருவருக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடு மீண்டும் இருவருக்கும் இடையில் முட்டி கொண்டதாக கூறப்படும் நிலையில் இருவரும் கடுமையாக வார்த்தையால் மோதி கொண்டதாக கூறப்படும் நிலையில் இருவரும் இனி இணைந்து வாழ வேண்டாம் பிரிந்து வாழ்வோம் என ஒரே அறையில் தங்கி இருந்த இருவரும் முடிவு செய்த நிலையில்.

அடுத்த நாள் 17ம் தேதி ஐஸ்வர்யா, கணவர் தனுஷ் உடன் ஆந்திராவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியேறி அதே ஓட்டலில் தனி அறைக்கு சென்றுள்ளார் ஐஸ்வர்யா, இதனை தொடர்ந்து மீண்டும் ஜனவரி 17ம் தேதி இருவரும் பேசி பிரிவதில் உறுதியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அன்று இரவே தனுஷ் முதலில் ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவிப்பு வெளியிட அடுத்த இரண்டு மணி நேரத்தில் தனுஷை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இருவரும் பிரிவதர்க்கு முன்பு மூன்று நாட்கள் ஒரே அறையில் ஒன்றாக தான் இருந்தார்கள் என அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐஸ்வர்யா – தனுஷ் இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே தனுஷ், மிருணாள் தாகூர் காதலிப்பதாக பேச்சு அடிபட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டி பதிவிட்டு வந்தது இருவரின் காதல் கிசு கிசுவை உறுதிபடுத்தும் விதமாக அமைந்தது

தனுஷ் மற்றும் மிருணாள் தாகூர் இருவரும் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வதந்தி குறித்து இரு தரப்பினர் கூடிய விரைவில் விள்ளகமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்

இந்நிலையில் தனுஷ் அவருடைய இரண்டாவது திருமணத்திற்கு , அவருடைய இரண்டு மகன்களிடம் சம்மதம் வாங்கி விட்டதாகவும், இரண்டு மகன்கள் முன்னிலையில் தனுஸ் இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாகவும், ஆனால் திருமணம் இரன்டு குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் மிக சிம்பிளாக நடைபெற இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.