பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் பணி நிரந்தரம் கோரி சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், 13 ஜனவரி 2026 அன்று, மற்ற போராட்டக்காரர்களுடன் காவல்துறை காவலில் இருந்தபோது விஷம் அருந்தியதாக கூறப்படுகிறது. உடனடியாக கீழ்பாக்கம் KMC மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், அதே நாள் மாலையில் உயிரிழந்தார்.
பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது மட்டுமின்றி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆதரவாக பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. திமுகவின் நிறைவேறாத வாக்குறுதியினால், இன்று ஒரு உயிர் பிரிந்துள்ளது.தற்பொழுது பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், குறைந்த ஊதியம், வேலைப் பாதுகாப்பின்மை,போன்ற பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு,அரசுப் பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் , தொடர்ந்து பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சியில் அமர்ந்து 4 ஆண்டுகள் கடந்தும், இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், ஏமாற்றம் அடைந்த பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஒருவர் உயிர் இழந்த சம்பவம், ஆளும் திமுக அரசின் நிர்வாக சீர்கெட்ட தோல்வியின் எடுத்துக்காட்டாக அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து 6-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் என்பவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன என தெரிவித்துள்ள நயினார்.
மேலும் “உங்க கனவ சொல்லுங்க” என விளம்பர நாடகம் போடும் முதல்வர் முக ஸ்டாலின், , தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிய ஆசிரியர் கண்ணன் அவர்களின் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவு தான் இந்த துர்மரணம். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்த நயினார் .
மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகப் போலி வாக்குறுதியளித்த திமுகவினை நம்பி இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர் கண்ணன் அவர்கள், இறுதியில் தற்கொலை முடிவை எடுத்திருப்பது ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு நம்மில் ஒருவரை மீண்டுமொருமுறை நாம் இழந்திருக்கிறோம். இப்படிப்பட்ட கொடூர ஆட்சியை ஒழித்தால் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அகால மரணமடைந்த அப்பாவி ஆன்மாக்கள் சாந்தியடையும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

