TTV – அமிட்ஷா ரகசிய சந்திப்பு… முடிந்தது பேச்சுவார்த்தை… ராஜசபா உறுப்பினராகிறார் TTV தினகரன்…

0
Follow on Google News

கடந்த நாடளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த TTV தினகரன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த அடுத்த சில நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியிருவதாக அறிவித்தார். இருந்தாலும் மீண்டும் TTV தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் விஜய் கட்சியில் இணைந்துள்ள அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், TTV தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை விஜய் கட்சியில் கூட்டணிக்கு கொண்டு வருவதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்து கொண்டார். இருந்தாலும் TTV தினகரன் தேர்வு பாஜகவே இருந்து வந்தது, ஆனால் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து முறையான ஒத்துழைப்பு இல்லாததால், அவர் இருக்கும் கூட்டணிக்குள் எப்படி செல்வது என்கிற தயக்கம் TTV தினகரனுக்கு இருந்து வந்தது.

இருந்து பாஜக தரப்பில் இருந்து, உங்களுக்கான சீட்டை நாங்கள் பெற்று தருகிறோம் கூட்டணிக்கு மீண்டும் வாருங்கள் என TTV தினகரன் உடன் போச்சுவார்தையில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. அதே நேரத்தில் விஜய் தரப்பில் இருந்து செங்கோட்டையன் தொடர்ந்து TTV தினகரனிடம் பேசி வந்தார். இப்படி ஒரு சூழலில் TTV தினகரன் விஜய் பக்கம் செல்ல தான் அதிக வாய்ப்பு என எதிர்பார்க்க பட்ட நிலையில், TTV தினகரன் பாஜக பக்கம் திருப்பி இருப்பது மிக பெரிய ட்விஸ்ட்டாக அமைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருச்சியில் எஸ் பி வேலுமணி போன்ற முக்கிய தலைவர்களை சந்தித்து வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க தவறினால் , அதிமுக என்கிற கட்சி அழிவை நோக்கி சென்று விடும், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆகையால் கூட்டணி விவகாரத்தில் நாங்கள் சொல்வதை கேளுங்க என அமித்ஷா தெரிவிக்க, அந்த தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் கொண்டு சேர்ந்து இருக்கிறார் எஸ்பி வேலுமணி.

இதனை தொடர்ந்து திருச்சியில் அமித்ஷா – TTV தினகரன் ரகசிய சந்திப்பு அரங்கேறி இருக்கிறது. வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டு இருக்கிறது. அப்போது வரும் தேர்தலில் அமமுகவுக்கு 9 தொகுதி 1 ராஜசபா சீட் ஒதுக்க வேண்டும் என அமித்ஷாவிடம் கேட்டிருக்கிறார் TTV தினகரன், இறுதியாக 7 தொகுதிகள் வரை TTV தினகரனுக்கு ஒதுக்கீடு செய்ய அமித்சா ஓகே சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராஜசபா சீட் அதிமுக உடன் பேசி முடிவு செய்யலாம் என அமித்ஷா தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் TTV தினகரன் போட்டியிட வில்லை என்றும், அவருக்கு பதில் அவருடைய மனைவி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, TTV தினகரன் ராஜசபா சீட் பெற்று டெல்லி செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமித்சா தமிழகம் வந்து டெல்லி சென்ற பின்பு, எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார், அப்போது TTV விவகாரம் குறித்து பேசப்பட்டு இருக்கிறது, TTV தினகரனுக்கு ராஜசபா சீட் கொடுப்பது குறித்து பேசப்பட்டது அப்போது, கடந்த முறை ஜிகே வாசனுக்கு கொடுத்த ராஜசபா சீட்டை இம்முறை TTV தினகரனுக்கு கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் TTV தினகரன் விஜய் உடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பே இல்லை என்றும், அமிதாவுடன் நடந்த ரகசிய சந்திப்புக்கு பின்பு தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்து போட்டியிடுவது தான் சரியானது என்கிற முடிவுக்கு வந்துள்ள TTV தினகரன் வரும் 23ம் தேதி பிரதமர் பங்கேற்கும் சென்னை நிகழ்ச்சியின் மேடையில் இடம்பெறுவார் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.