நடந்து முடிந்த மும்பை மாநகராட்சி தேர்தல் திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. குறிப்பாக ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக நகரமாக கோடீஸ்வரர்கள் கோலாச்சி இருக்கக்கூடிய மும்பை மாநகராட்சியை கடந்த 30 வருடங்களாக தாக்கரே குடும்பத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் சுமார் 227 வார்டுகளின் 118 வார்டுகளில் பிஜேபி வெற்றியை பெற்று மும்பை மாநகராட்சியில் தாக்கரே குடும்பத்தின் சாம்ராஜ்ஜியத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறது பாஜக.
இந்த மாநகராட்சி தேர்தல் மூலம் மகாராஷ்டிராவில் தாக்கரே குடும்பத்தினர் மற்றும் சரத் பவர் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய சரிவை கொடுத்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி அடையாளம் தெரியாமல் காணாமல் சென்றிருக்கிறது . குறிப்பாக பிரதமர் மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவருமே மும்பை மாநகராட்சி தேர்தலில் எந்த ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடாமலேயே பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது என்றால், மோடியும் அமித்ஷாவும் இறங்கி மும்பை மாநகராட்சி தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தால், இந்த தேர்தலில் எப்படி காங்கிரஸ் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போனதோ அதேபோன்று தாக்கரே குடும்பத்தினரும், சரத் பவர் குடும்பத்தினரும் காணாமல் போய் இருப்பார்கள் என்கின்றனர் மும்பை வாசிகள்.

முழுக்க முழுக்க முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்டினம் தேர்தல் வியூகமே மும்பை மாநகராட்சியில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது பாஜக ஒவ்வொரு தேர்தலிலும் இந்தி கூட்டணியினர் தோல்வியை தழுவும் பொழுது மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தையும் குறை சொல்வார்கள் , அதேபோன்று சமீபத்தில் நடந்த மும்பை மாநகராட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்த சிவசேனா, தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் கையில் அழியும்படி மையை வைத்திருந்ததாகவும், அந்த மையை வாக்காளர்கள் அழித்துவிட்டு மீண்டும் மீண்டும் வந்து வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இதற்கு முன்பு கேரளா மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற சில மாநகராட்சிகளை கைப்பற்றியது. தற்பொழுது மும்பை மாநகராட்சியையும் பாஜக கைப்பற்றி இருக்கும் நிலையில், அடுத்த சில தினங்களிலேயே தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தேர்தலை நோக்கி பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றி திமுகவிற்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது, காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் சட்டசபை தேர்தலில் தேஜஸ் டீ யாதவ் குடும்ப அரசியலுக்கு முடிவுக்கு கொண்டு வந்த பாஜக, மகாராஷ்டிராவில் தாக்கரே குடும்பத்தை மட்டுமல்லாமல் சரத் பவர் குடும்ப அரசியலையும் முடிவுக்கு கொண்டுவர வகையில் பாஜக மகாராஷ்டிராவில் மிகப் பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.
இப்படி இந்தியா முழுவதும் தொடர்ந்து குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் பாஜக, அடுத்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான காய்களை மிக சாதுரியமாக நகர்த்தி வரும் அமித்ஷா, சவாலுடன் களம் இறக்க இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

