தூத்துக்குடியில் ‘கிரீன் காப்பர்’ தொழிற்சாலை… நீதிமன்றம் உத்தரவு … மகிழ்ச்சி வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்…

0
Follow on Google News

சுற்று சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்யப்படும் பசுமை தாமிர ஆலை என்பதே கிரீன் காப்பர் ஆலை என அழைக்கப்படுகிறது, ஜெர்மனி மற்றும் ஸ்வீடனில் இருந்து கொண்டுவரப்படும் நவீன தொழில் நுட்பங்களுடன், ஆண்டுக்கு 1.2 லட்சம் டன் மறுசுழற்சி திறன் உருவாக்கப்படும். இந்த மாற்றத்தின் மூலம், மொத்தமாக ஆண்டுக்கு 4 லட்சம் டன் செம்பு உற்பத்தி திறன் உருவாக்கப்படுவதுடன், சல்பர் டைஆக்சைடு வெளியீடு 30 சதவீதம், கழிவு உற்பத்தி 40 சதவீதம், கார்பன் டைஆக்சைடு வெளியீடு 50 சதவீதம் குறையும்.

அதேபோல், நீர் பயன்பாடு 20 சதவீதமும், மின்சார பயன்பாடு 25 சதவீதமும் குறைக்கப்படும். முன்னதாக, பாஸ்போரிக் ஆசிட் ஆலை மூலம் ஆண்டுக்கு சுமார் 22 லட்சம் டன் அளவிலான மூலப்பொருட்கள் மற்றும் துணை உற்பத்திகள் கையாளப்பட்டு வந்தன. புதிய திட்டத்தின் கீழ், இந்த பாஸ்போரிக் ஆசிட் ஆலை நிரந்தரமாக நிறுத்தப்படும். மேலும் இதன் மூலம் ஜிப்சம் தொடர்பான சுற்றுச்சூழல் பாதிப்புகள் என்பதே கிடையாது என்பது மகிழ்ச்சியான ஒன்று.

தற்போது, டபுள் கான்டாக்ட் டபுள் அப்சார்ப்ஷன் தொழில்நுட்பம் மூலம் சல்பர் டைஆக்சைடு வெளியீடு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மாற்றங்களில், இந்த தொழில்நுட்பத்தின் செயல்திறன் 99.95 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்படும். மறுசுழற்சி செம்பு பயன்பாடு அதிகரிப்பதால், சல்பர் உள்ளீடும் குறைக்கப்படும்.

மேலும், வெட் எலக்ட்ரோஸ்டாட்டிக் பிரெசிபிட்டேட்டர்கள், ஆக்டிவேட்டட் கார்பன் அமைப்புகள், மேம்பட்ட ஸ்க்ரப்பர்கள் மற்றும் டெயில்-கேஸ் மறுசுழற்சி ஆகியவை அமல்படுத்தப்பட்டு, சல்பர் டைஆக்சைடு வெளியீடு ஒரு டன் ஆசிடுக்கு 0.5 கிலோகிராமிற்கும் குறைவாக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், செம்பு உற்பத்தியில் கார்பன் டைஆக்சைடு வெளியீடு 34 சதவீதம் குறையும்.

புதிய கிரீன் காப்பர் திட்டத்தின் கீழ், நீர் மேலாண்மை முற்றிலும் மாற்றப்படுகிறது. மொத்த நீர் தேவையின் 80 சதவீதம் கடல் நீர் உப்பு நீக்கம் மற்றும் நகர்ப்புற கழிவுநீர் சுத்திகரிப்பு மூலம் பெறப்படும். மீதமுள்ள நீர், சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு, முழுமையான ‘சீரோ லிக்விட் டிஸ்சார்ஜ்’ நடைமுறை பின்பற்றப்படும். கூடுதலாக சுத்திகரிக்கப்பட்ட நீர் அருகிலுள்ள கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் பயன்பாட்டு நீராக வழங்கப்படும்.

முன்னதாக கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கப்பட்ட நிலையில், புதிய திட்டத்தின் கீழ் ரூபாய் 100 கோடி மதிப்பிலான நிரந்தர நிதி உருவாக்கப்படும். இந்த நிதி மூலம் பள்ளிகள், மருத்துவமனைகள் மேம்பாடு, பசுமை முயற்சிகள், பெண்கள் மற்றும் இளைஞர் திறன் வளர்ச்சி, டிஜிட்டல் வசதிகள், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர் வணிகங்களுக்கு முன்னுரிமை வழக்கப்பட இருக்கும் தகவல் தூத்துக்குடி மக்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சியான செய்தியாக அமைத்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் ‘கிரீன் காப்பர்’ தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை பெற, வேதாந்தா குழுமம் தமிழ்நாடு அரசிடம் அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் தொழில்துறை வளர்ச்சியையும் ஒருங்கிணைக்கும் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.