தயார் நிலையில் அமித்ஷாவின் வார் ரூம்… குறி வைக்கப்படும் 13 திமுக அமைச்சர்கள் … தேர்தலுக்கு ஆப்பரேஷனை முடிக்க திட்டம்…

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் தன்னுடைய இருப்பிடத்தையே மற்ற போகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. சென்னை மயிலாப்பூரில் உள்ள 4 மாடி கொண்ட தனி வீடு அமித்ஷா தங்குவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்த வீட்டின் உள்ள வார் ரூம் மற்றும் சமூக வலைதள பிரிவு என தனி தனி அலுவலகம் என 4 மாடி கொண்ட கட்டிடத்தில் தமிழக தேர்தல் முடியும் வரை தங்கி செயல்பட இருக்கிறார் அமித்ஷா.

தற்பொழுது தமிழகத்தில் உள்ள பெரும்பன்மையான மீடியாக்கள் முதல் குடும்பம் கட்டுப்பாட்டில் இருப்பதால், எந்த செய்தியை வெளியிட வேண்டும், எந்த செய்தியை மூடி மறைக்க வேண்டும், மக்கள் மத்தியில் என்ன செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்கிற மொத்த கண்ட்ரோல் முதல் குடுமம்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சமூக வலைதளத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க அமித்சா முடிவு செய்துள்ளார்.

அதற்காகவே அமித்சா தங்கா இருக்கும் மயிலாப்பூர் வீட்டில், ஒரு பகுதி சமூக வலைதள பிரிவாக செயல்பட இருக்கிறது. மேலும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ஒவ்வொரு வாரமும், தமிழக அரசியல் குறித்த ரிபோர்டை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுத்து வந்த நிலையில், 13 திமுக அமைச்சர்கள், மூன்று முக்கிய எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் குறி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனேவே டாஸ்மாக் தொடர்பான இடங்களில் நடந்த அமலாக்க துறை சோதனையில் துணை முதல்வர் உதயநிதி நெருங்கிய நண்பர்கள் சிக்கி இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்றம் கொடுத்த தடை உத்தரவால் இந்த விவகாரத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வதற்கு சிக்கலாக அமலாக்க துறைக்கு இருந்து வருகிறது, இருந்தாலும் அடுத்த வெளியாக இருக்கும் பராசக்தி படத்தை குறிவைத்து படம் வெளியானதும் ரெய்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மயிலாப்பூரில் அமித்ஷா தங்க இருக்கும் 4 மாடி கட்டிடத்தில் இருந்து தமிழக அரசியலில் திமுகவை எதிர்த்து எப்படி பதில் தாக்குதல் நடத்துவது, ஒரு பக்கம் நேரடியா தாக்குதல் நடத்துவது போன்ற பல ஆலோசனைகள் நடைபெற இருக்கிறது. தற்சமயம் திமுகவுக்கு எதிராக அரசியல் பதிலடி மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது, இனி வரும் காலங்களில் பாஜக தரப்பில் இருந்து கொடுக்கும் தாக்குதலுக்கு திமுக பதிலடி கொடுக்க முடியாதபடி திணறடிக்கும் விதமாக நேரடி தாக்குதல் இருக்க வேண்டும் என்பதும் அமித்ஷாவின் திட்டங்களின் ஒன்றாக உள்ளது.

மேலும் திமுக அமைச்சராக்களை பொறுத்தவரை அவர்களுக்குள் அரசியல் போட்டிகளால்,ஒருவரை ஒருவர் போட்டு கொடுப்பதில் வல்லவர்கள், அப்படி தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய வீடு கட்டி வருவது, இடத்தின் விலை முதல் பாஜகவுக்கு போட்டு கொடுத்ததே திமுகவில் இருக்கும் முக்கிய புள்ளி தான் என்றும், அதே போன்று அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்த எதுவாக போட்டு கொடுத்ததும் திமுகவில் இருக்கும் மற்றொரு முக்கிய புள்ளி என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு பக்கம் அமித்சாவின் வார் ரூம் ஒருப்பக்கம் ஏற்பாடுகள் நடத்து வரும் நிலையில், தற்சமயம் தமிழகம் வந்துள்ள அமித்ஷா, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் முக்கிய தலைவர்களுடம் தனியாக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியவர், அடுத்து நம்மளுடைய அரசியல் நகர்வுகள் எப்படி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் தற்பொழுது தமிழகம் வந்துள்ள அமித்சா டெல்லி திரும்பிய நிலையில், அடுத்து தமிழகம் வரும் அமித்ஷா தேர்தல் முடியும் வரை நிரந்தரமாக மயிலாப்பூரில் தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, இடையில் தேவை பட்டால் டெல்லி சென்று வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.