சம்மட்டி அடி கொடுத்த கர்நாடக மக்கள்… ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலம்… மக்கள் ஏமாற தயாராக இல்லை..

0
Follow on Google News

தொடர்ந்து மத்தியில் மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள பாஜக, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர் தொடர் வெற்றியை பெற்று தன்னுடைய எல்லை பரப்பை அதிகரித்து வருகிறது பாஜக, மறுப்பாக்கம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, தோல்வி மேல் தோல்வி அடைந்து சுருங்கி லெட்டர் பேட் கட்சியாக சரிவை சந்தித்து வருகிறது, குறிப்பாக பல மாநிலங்களில் காங்கிரஸ் என்கிற கட்சி அட்ரசே இல்லாமல் இருக்கிறது.

இப்படி காங்கிரஸ் கட்சியின் சரிவுக்கு மட்டுமில்லாமல் பாஜகவின் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் ராகுல் காந்தியின் பிரச்சாரங்களும் , அவருடைய அரசியல் நடவடிக்கைகளும் தான் என்கிற எதார்த்தத்தை புரிந்து கொள்ளாத ராகுல் காந்தி, பாஜக தொடர் வெற்றிக்கு காரணம் , EVM வாக்கு இயந்திரம் தான் என இதற்கு முன்பு குற்றசாட்டுகளை வைத்து வந்த ராகுல் காந்தி தற்பொழுது ஓட்டு சோரி என வாக்குகள் திருடப்படுகிறது என்கிற குற்றசாட்டுகளை வைத்து அது பொய் என்பது அம்பலமாகி உள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திலே ராகுல் காந்தி சொல்வது பொய் என்பது அம்பலமாகி இருக்கிறது. கர்நாடக தேர்தல் ஆணையம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தும், காங்கிரஸ் கட்சியினர் ஏற்க்க தயாராக இல்லை, இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து, கர்நாடகாவில் ஆய்வு நடத்தியது. 

அதில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் அனுமதியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 83.61% மக்கள் “EVM- இயந்திரம் மீது முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் 84.55% மக்கள் , இந்தியத் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்படுகின்றன என தெரிவித்துள்ளனர். EVM இயந்திரத்தில் முறைகேடு நடக்கிறதா என மக்களிடம் கேட்க பட்ட போது அப்படியெல்லாம் இல்லை என தெரிவித்து இருக்கிறார்கள் மக்கள்.

கர்நாடக மக்கள் EVM இயந்திரத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நிலையில், “இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது” என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு, பொதுமக்களின் பார்வையில் முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சொந்த மாவட்டமான கலபுரகி யில் உள்ள மக்கள் தேர்தல் ஆணையம் மீது முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்டு கதைகளை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை ராகுல் காந்திக்கு உணர்த்தியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் நடத்த ஓட்டு சோரி குறித்த பொய்யான குற்றசாட்டு குறித்து மக்கள் மத்தியில் நடந்த ஆய்வில், மக்கள் யாரும் தேர்தல் ஆணையத்தை குறை சொல்லவில்லை, இந்திய ஜனநாயகம் குறித்து யாரும் சந்தேகம் அடையவில்லை, இதன் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தை முழுமையாக மக்கள் நநம்புகிறார்கள் என்பதையாவது ராகுல் காந்தி உட்பட காங்கிரசார் நம்ப வேண்டும்.

இந்நிலையில் அரசியல் எதார்த்தத்தை புரிந்து தன்னுடைய தவறை உணர்ந்து மக்கள் மத்தியில் நேர்மையான அரசியலை கையாண்டு மக்கள் மனதை வெல்வதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்வதை விட்டுவிட்டு, மத்திய பாஜக அரசு மீது பொய்யான குற்றசாட்டுகளை வைப்பது மூலம், மக்கள் மத்தியில் பாஜக மீதான வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்கிற ராகுல் காந்தியின் திட்டம் தொடர் தோல்வியை சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் ராகுல் காந்தியின் தொடர் பொய் பிரச்சாரம் மக்கள் மத்தியில் ராகுல் காந்தி மீது வெறுப்புணர்வை அதிகரிக்க செய்து அது பாஜகவுக்கு சாதகமாக இருந்து வரும் நிலையில், ராகுல் காந்தி அரசியலில் இருக்கும் வரை பாஜகவுக்கு தொடர் வெற்றி தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.