திமுக போட்ட தடைகள்.. உடைதெரிந்த நயினார் நாகேந்திரன்… திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த நாயனாரின் பயணம்..

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” கடந்த அக்டோபர் 12 தேதி தொடங்கி சுமார் 84 நாட்கள் தமிழகமெங்கும் பட்டி தொட்டி எங்கும் சுற்றி புதுக்கோட்டையில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின் மக்கள் விரோத போக்கை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வகையில் இருந்த நயினார் நாகேந்திரனின் இந்த பயணத்தில், மதுவால் தமிழகம் சீரழிந்து சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரிக்கிறது என்பது அம்பலப்படுத்தப்பட்டது.

மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், தமிழ்நாட்டை கூறுபோட்டு வரும் முதல் குடும்பத்தின் ஆதிக்கம் குறித்தும் மக்கள் மத்தியில் நயினார் இந்த பயணத்தின் போது எடுத்துரைத்தார். திமுகவை வீழ்த்தி தமிழ்நாட்டின் பெருமையை மீட்டெடுக்கும் நோக்கில் நாயனாரின் இந்த பயணம் தமிழகமெங்கும் மக்கள் உற்சாகத்துடன் வற்றவேற்ற நிகழ்வை பார்க்கும் போது, மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டதை உணர முடிந்தது.

குறிப்பாக தமிழக பாஜகவின் வாக்குசாவடி கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் அமைந்த நாயினர் நாகேந்திரனின் இந்த பயணம் மக்களுக்கும் பாஜகவுக்கு இடையிலான நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையில் அமைத்தது. ஆளும் திமுக அரசு ஆயிரம் தடைகளை போட்டாலும் அது அத்தனையையும் தகர்ந்து எறிந்து வெற்றிகரமாக நயினார் நாகேந்திரன் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தை முடித்துள்ளார்.

மத்திய மோடி அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றியதை தோலுரித்து, மக்களுக்கு மத்திய மோடி அரசு தான் பல திட்டங்களை கொடுத்துள்ளது என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தது மட்டுமில்லாமல், திமுக அறிந்த நிர்வாக சீர்கேடு போன்றவற்றை ஆதாரத்துடன் மக்கள் மத்தியில் எடுத்துரைக்க பட்ட நாயனாரின் இந்த பயணம் மக்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக ஆட்சியில் சீரழித்து வரும் தமிழகத்தின் நிலையை வீடியோவாக திரையிடப்பட்டு மக்கள் மத்தியில் திமுவின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைத்த இந்த நாயனாரின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணதில் மக்கள் தாங்களாகவே கூட்டம் கூட்டமாக ஆர்வமாக கலந்து கொண்டது, ஆளும் திமுக அரசுக்கு எதிராக மக்கள் எதோ ஒரு முடிவோடு தான் இருக்கிறார்கள் என்பதை மக்கள் கூட்டம் வெளிப்படுத்தியது.

திமுகவுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்கிற நம்பிக்கையை இந்த தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் மூலம் விதைத்து இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.இப்படி ஒரு நம்பிக்கை மக்கள் மத்தியில் வருவதற்கு முக்கிய காரணமா, இந்த பயணத்தின் போது மக்களிடம் நேரடியாக அவர்களின் குறைகளை கேட்டறிந்தது, மற்றும் மக்களோடு மக்களாக போராட்டம் , ஆர்பாட்டத்தில் நயினார் கலந்து கொண்டது மக்கள் மத்தியில் திமுகவுக்கு மாற்று தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்கிற மிக பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் தமிழகத்தில் ஓவ்வொரு பகுதியிலும் உள்ள அந்த மக்களின் கலாச்சாரத்துடன் கலக்கும் வகையில் கோயம்புத்தூரில் வள்ளிக்கும்மியில் பங்கேற்றது மற்றும் தீபத்தூண் பூர்ண சந்திரனுக்காக மோட்ச தீபம் ஏற்றியது வரை , நாயனாரின் இந்த பயணம் மக்களுடனான உணர்ச்சிபூர்வமான கலாச்சாரத்தை பிரபலித்தது.

காசுகொடுத்து கூட்டம் கூட்டி விளம்பரம் செய்யும் கட்சிகளுக்கு மத்தியில் மக்கள் தன்னெழுச்சியாக நாயனாரின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணத்தில் மக்கள் கலந்து கொண்டது, மிக பெரிய வெற்றியாக அமைத்துள்ளது இந்த பயணம், அந்த வகையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி வீட்டுக்கும் அனுப்பும் பயணமாக அமைத்துள்ளது நாயனாரின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்.