கரூர் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து டெல்லியில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கரூர் சம்பவத்தின் போது விஜய் வாகனத்தை ஓட்டிய டிரைவர். மற்றும் தவெக நிர்வாகிகள் ஆதாவ அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் , நிர்மல் குமார் ஆகியோருடன் தனித்தனியாக அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள், சுமார் 45 கேள்விகள் இவர்களிடம் கேட்கப்பட்டதில் யாருமே முறையாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இருந்தும் சிபிஐ துருவி துருவி இவர்களிடம் இருந்து பதில் வாங்குவதற்காக முயற்சித்ததாக கூறப்படுகிறது . சம்பவம் அன்று விஜய் வாகனத்தை ஓட்டிய டிரைவரிடம் சிபிஐ விசாரணை நடத்தியதில் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் அதிகமாக உள்ளது என்று உங்களை அறிவுறுத்தினார்களா என்று கேட்டபோது, அதற்கு டிரைவர் கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் வாகனம் செலுத்துவதிலே கவனமாக இருந்தேன்,

காவல்துறை அதிகாரிகள் விஜயிடமோ அல்லது வாகனத்திற்கு உள்ளே இருந்த தாவேகா நிர்வாகிகளிடம் என்ன பேசினார்கள் என்று நான் கவனிக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் விஜயின் வாகனத்தை ஓட்டிய டிரைவர். மேலும் டிரைவருக்கு இந்தி மற்றும் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் சிபிஐ அதிகாரிகள் அந்த டிரைவரிடம் விசாரணை நடத்துவதில் மிகப்பெரிய சிரமத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் திமுக அரசு மற்றும் தவெக இரண்டு தரப்பின் மீதும் சிபிஐ சந்தேகத்து வருவதாகவும், குறிப்பாக கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அவசர அவசரமாக பரிசோதனை செய்வதற்கான அவசரம் திமுக அரசுக்கு ஏன் வந்தது என்கின்ற சந்தேகம் சிபிஐக்கு இருந்து வருகிறது. மேலும் சிபிஐயிடம் தவெக நிர்வாகிகள் இது திமுகவின் திட்டமிட்ட சதி என்ற குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தவெக நிர்வாகிகள் சிபிஐயிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் புதியதாக சிபிஐ எஃப் ஐ ஆர் பதிவு செய்து அதற்குள் நடிகர் விஜய் பெயரை கொண்டு வந்து சிபிஐ விசாரணைக்கு விஜய் அழைக்கலாம் என்றும் கூறப்படுகிறது .
அதே நேரத்தில் கரூர் சம்பவத்தின் போது விஜய் மீது செருப்பு வீசியவர் வீடியோவை ஆராய்ந்து அவரையும் விசாரணைக்கு அழைத்து, யாருடைய அறிவுறுத்தலின்படி செருப்பை வீசினார் என்று துருவி துருவி சிபிஐ விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை அழைத்து விசாரிக்க வேண்டும் என தவெக நிர்வாகிகள் சிபிஐயிடம் தெரிவித்ததை தொடர்ந்து.
சிபிஐ அதிகாரிகள் செந்தில் பாலாஜியையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கு என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த விசாரணை செந்தில் பாலாஜிக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி இறுதியில் இடைக்கால அறிக்கையை சிபிஐ சமர்ப்பிக்க இருக்கும் நிலையில்,
திமுக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை சிபிஐ முன் வைத்தால் அது தமிழக உள்துறை அமைச்சகத்தை நோக்கி நகரும் என்றும், அந்த வகையில் இன்று தமிழக உள்துறை அமைச்சரவை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதால, இது நேரடியாக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு சிக்கலையை கூட ஏற்படுத்தலாம் அல்லது நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்கும் என்கிறது டெல்லி வட்டாரங்கள்.

