2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. குறிப்பாக தொடர்ந்து திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் தனித்தனியாக சர்வே எடுத்து கள நிலவரம் குறித்து தெரிந்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய சவாலாக இருந்தது தென் மாவட்டம் தான், இதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் சமூகத்திற்கு எதிரானது எடப்பாடி தலைமையிலான அதிமுக என்கிற பிரச்சாரம் தான்.
ஆனால் தற்போதைய தென் மாவட்ட தேர்தல் களம் அதிமுக கூட்டணிக்கு சாதகமாக உருவெடுத்து வந்தாலும், குறிப்பாக வேட்பாளர் தேர்வில் அதிமுக மட்டுமில்லை அதிமுக கூட்டணி கட்சிகள் சாதுர்யமாக வேட்பாளர்களை தேர்வு செய்யவில்லை என்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்லும் வகையில், அதிமுக கூட்டணிக்கு சாதகமான தேர்தல் களம், தவறான வேட்பாளர் தேர்வின் மூலம் அது அந்த ஒரு தொகுதி மட்டுமின்றி தென் மாவட்டத்தில் பெரும்பாலான தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு எதிராக எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

குறிப்பாக தென் மாவட்ட தலைநகரான மதுரையில் அதிமுகவின் ஆளுமையாக இருக்க கூடிய முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், செல்லூர் ராஜு மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிமுகவுக்கு கூடுதல் பலம், குறிப்பாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும் கூட, மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதியில் 5 தொகுதியில் வெற்றி பெற்று திமுகவுக்கு சம நிலையில் இருந்தது.
இதற்கு முக்கிய காரணம் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சார்த்த சமூகம் தான், அந்த வகையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 5 பேரில் 4 பேர் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள், மற்ற 1 தொகுதியான மேலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர், குறிப்பாக மேலூர் சட்டசபை தொகுதியில் முக்குலத்தோருக்கு அடுத்தபடியாக முத்தரையர் சமூகத்தினர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சிகள் வரும் தேர்தலில் வேட்பாளர் தேர்வில், குறிப்பிட்ட மதுரை மேற்கு, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம் , திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய இந்த 5 முக்குலத்தோர் தொகுதியில் மாற்று மைக்ரோ மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை களம் இறங்கினால், அதிமுக கூட்டணிக் எதிராக முக்குலத்தோர் சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும், இது நேரடியாக எடப்பாடி பழனிசாமியை நோக்கி இதோ முக்குலத்தோர் வாய்ப்பை தட்டி பறித்து விட்டார் என்கிற பிரச்சாரம் மிக பெரிய அளவில் வெடிக்க வாய்ப்புள்ளது.
அந்த வகையில் குறிப்பிட்ட இந்த 5 தொகுதி தவிர்த்து, சோழவந்தான் ரிசர்வ் தொகுதி, மதுரை மத்திய தொகுதி அணைத்து சமூகமும் பரவலாக இருக்க கூடிய தொகுதி என்பதால் யாரையும் இங்கே வேட்பாளராக நிறுத்தலாம், மேலூர் தொகுதியில் முக்குலத்தோர் அல்லது முத்தரையர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் மட்டுமே சரியாக இருக்கும் , அதே போன்று மதுரை கிழக்கு தொகுதியில் முக்குலத்தோர் சமூகம் அல்லது அந்த தொகுதியில் கணிசமாக இருக்க கூடிய கோனார் சமூகத்திற்கு வாய்ப்பு கொடுக்கலாம், அதே போன்று மதுரை தெற்கு தொகுதியில் பெரும்பான்மையாக இருக்க கூடிய முக்குலத்தோர் சமுகம் அல்லது அதற்கு அடுத்ததாக இருக்க கூடிய சௌராஷ்டிரா சமூகத்திற்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம்.
இதை தவிர்த்து மைக்ரோ மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் பெருமைப்பாண்மை சமூகத்தினரின் எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை புரிந்து கொண்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர் தேர்வில் அதிகம் கவனம் செலுத்தினால் தென் மாவட்டதில் மிக பெரிய வெற்றியை பெறலாம் என்கிறது தேர்தல் கள நிலவரம். கடந்த சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதியில் 8 தொகுதியில் திமுக முக்குலதோர் வேட்பாளர்களை களம் இறங்கி நாங்கள் தான் முக்குலத்தோருக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறோம் என்கிற தோற்றத்தை அந்த சமூக மக்கள் மத்தியில் வெளிப்படுத்தியத்தின் விளைவு தொடர்ந்து தென் மாவட்டத்தில் அடுத்தடுத்து வெற்றியை பெற்று வருகிறது திமுக என்பது குறிப்பிடதக்கது.

