திமுகவின் மொழி வெறுப்பு அரசியல்… மோசமா சூழலில் தமிழகம்.. புலம் பெயர் தொழிலார்கள் மீதான தாக்குதல் பின்னணி…

0
Follow on Google News

வந்தாரை வாழவைத்த தமிழகம் என்கிற பெருமை கூறிய மாநிலமாக ஒரு காலத்தில் திகழ்ந்து வந்த மாநிலம் தமிழ்நாடு. மொழி, இனம் , சாதி, மதம்திற்கு அப்பாற்பட்டு யார் வந்தாலும் அரவணைத்து கொள்ளும் மாநிலமாக திகழ்ந்து வந்த தமிழகத்தை நோக்கி பிரமாநிலத்தவர்கள் பிழைப்பு தேடி வருவதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டிற்கு சென்றால் எப்படியும் பிழைத்து கொள்வோம் என்கிற நம்பிக்கை தான்.

ஆனால் இன்றைய தமிழக சூழல் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமில்லை, தமிழகத்தின் பூர்வகுடி மக்களே ஒவ்வொரு நிமிடமும் உயிரை கையில் பிடித்து கொண்டு வாழும் சூழலில் உள்ளது திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிலை. தொடர்ந்து புலம்பெயர் தொழிலார்கள் மீதான தாக்குதல் தமிழகத்தில் அதிகரித்து வருவது ஒரு செய்தியாக கடந்து செல்ல முடியாது, குறிப்பாக திமுக ஆட்சியில் மொழி பெருமை என்கிற பெயரில் பிற மொழி வெறுப்பை விதைப்பது, இது தென் மாநிலம் – வடமாநிலம் என்கிற பாகுபாடு உருவாக காரணமாகி விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மொழி வெறுப்பு பிரச்சாரத்தின் மூலம் வட மாநிலத்தவர்கள் எதிரியாக சித்தரிக்கப்பட்டு, பிழைப்பு தேடி வந்த வடமாநிலத்தவர் தமிழர்களுக்கான வேலையை பறிக்கிறார்கள், குறிப்பாக அவர்கள் மீது நடத்தும் தாக்குதல் கூட நியாயம் கற்பிக்கும் வாதமாக உருவெடுப்பதை அங்கங்கே பார்க்க முடிகிறது.

கடந்த டிசம்பர் 25ம் தேதி மேற்கு வங்கத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் சுராஜ் , மற்றும் அவருடைய நண்பர் 21 வயதான ராகேஸும் கோவை உக்கடம் , புழுக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கே ஆட்டோ ஓட்டி வந்த மோஹம்மது பஜித் கான் என்கிற நபர் அவர்கள் மீது மோதுவது போன்று ஓடியதால், அவ்வழியாக சென்ற சுராஜ் எதிர்ப்பு தெறிக்க, உடனே மோஹம்மது பஜித் கான் அவருடை நண்பரை அழைத்து சுராஜ் மீது கடுமையாக தாக்கி இருக்கிறார்.

படுகாயம் அடைந்த சுராஜ் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பணியாற்றி உயிர் இழந்தார், இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போன்று தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. ஓடும் ரயிலில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதல் வீடியோ இதற்கு முன்பு வெளியானது.

மற்றொரு சம்பவமாக ஒடிசாவை சேர்ந்த ஒரு இளைஞரை நான்கு இளைஞர்கள் கடுமையாக தாக்கும் வீடியோ வைரலாகி மனதை படபதைக்க வைத்தது. ஒருவரை பயமின்றி தாக்கி ரீல்ஸ் போடும் அளவுக்கு திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் அதிகரிக்கும் போதை பழக்கமே பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுங்க முக்கிய காரணமாக அமைத்து வருகிறது என்பதை பார்க்க முடிகிறது.

திமுக ஆளும் தமிழகத்தின் நடந்தது போன்று, உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலக்களில் நடந்து இருந்தால், இந்த விவகாரம் தேசிய அளவில் மிக பெரிய அரசியலாக முன்னெடுத்து சென்று இருக்கும் இந்தி கூட்டணி கட்சிகள். திமுக ஆளும் மாநிலம் என்பதால் ராகுல் காந்தி உட்பட இந்தி கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அமைதியாக இருந்து வருகிறார்கள் என்கிற விமர்சனமும் எழுந்து இருக்கிறது.

வெறுப்பை விதைக்கும் வகையில் குறிப்பிட்ட ஒரு மொழிக்கு எதிராக திமுகவின் அரசியல் வெறுப்பு அரசியலாக உருவெடுத்து வருவதாகவும், அந்த வகையில் தற்பொழுது தமிழக்தில் நடந்து வரும் புலம்பெயர் தொழிலாளிகள் மீதான தாக்குதலுக்கு நிச்சயம் திமுக பதில் சொல்லியே ஆக வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருவது குறிப்பிடதக்கது.