உதயநிதி திட்டத்தை தகர்க்கும் கனிமொழி… திருச்செந்தூர் தொகுதில் போட்டி.. முதல்வர் பதவியை குறி வைத்து கனிமொழியின் அரசியல் ஆட்டம்…

0
Follow on Google News

அடுத்த திமுக தலைமை பீடத்தை பிடிக்கும் நோக்கில் காய்களை நகர்த்தி வந்த உதயநிதிக்கு போட்டியாக தன்னுடைய ராஜதந்திர அரசியல் மூலம் சாதுர்யமாக காய்களை நகர்த்தி வருகிறார் கனிமொழி. குறிப்பாக கருணாநிதிக்கு பிறகு யார் என்கிற அரசியல் வாரிசு போட்டியில் முக அழகிரியை கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே மெல்ல மெல்ல ஓரம் கட்டிய முக ஸ்டாலின், அதே நேரத்தில் துணை முதல்வர், செயல் தலைவர் என தன்னை அடுத்த திமுக தலைவராக ,முன்னிலையும் படுத்தி கொண்டார்.

இருந்தாலும் கருணாநிதி மறைவுக்கு பின்பு முக அழகிரி மீண்டும் திமுக உள்ளே வருவதற்கு முயற்சி செய்தும், அவரால் முடியவில்லை, இதற்கு முக்கிய காரணம் முக ஸ்டாலின் கருணாநிதி உயிரோடு இருக்கும் போதே , எதிர்காலத்தில் முக அழகிரி தனக்கு போட்டியாக வந்தால் எப்படி எதிர்கொள்வது என திட்டமிட்டு, முக அழகிரி ஆதரவாளர்களை திமுகவில் இருந்து ஓரம் கட்டி முற்றிலும் முக அழகிரியை அரசியலில் பலவீன படுத்தினார் முக ஸ்டாலின்.

அந்தவகையில் வாரிசு அரசியல் போட்டியில் முக ஸ்டாலினே வெற்றி பெற்றார். ஆனால் முக அழகிரியை ஓரம் காட்டியது போன்று கனிமொழியை முக ஸ்டாலினால் ஓரம் கட்ட முடியவில்லை, கருணாநிதி உயிரோடு இருக்கும் போது கருணாநிதியிடம் முக ஸ்டாலினை விட கனிமொழிக்கே முன்னுரிமை இருந்தது. இருந்தும் கருணாநிதி மறைவுக்கு பின்பு கனிமொழியை அரசியலில் இருந்து ஓரம் கட்ட முயன்றும் முக ஸ்டாலின் குடும்பத்தினரால் முடியாமல் போனது.

ராஜசபா எம்பியாக இருந்த கனிமொழி தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார், மேலும் தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலான கனிமொழியின் டெல்லி அரசியல், பாஜக , காங்கிரஸ் என அனைத்து தேசிய கட்சிகளிடமும் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி கொண்ட கனிமொழி, தனக்கென ஒரு லாபியை டெல்லியில் உருவாக்கி வைத்து இருக்கிறார். குறிப்பாக கனிமொழிக்கும் – உதயநிதிக்கு இடையில் அரசியல் போட்டி என்றால் கனிமொழிக்கு தேவையான உதவிகளை பாஜக செய்வதற்கு கூட தயாராக உள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கனிமொழி டெல்லி அரசியலிலே தொடரட்டு, மாநில அரசியலில் உள்ளே நுழையாதபடி பார்த்து கொண்டு வந்த உதயநிதி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திட்டத்தை சுக்கு நூறாக உடைத்து மாநில அரசியலில் உதயநிதிக்கு போட்டியாக தடம் பதிக்க தொடங்கி விட்டார் கனிமொழி. குறிப்பாக சமீப காலமாக கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம் கொடுப்பதின் பின்னணியில் கனிமொழியை புறக்கணிக்க முடியாத சூழலுக்கு முக ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி ஒரு சூழலில் டெல்லி அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்ட மாநில அரசியலில் என்ட்ரி கொடுக்க தொடங்கி விட்டார் கனிமொழி, வரும் சட்டசபை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட இருக்கும் கனிமொழி, திமுக மீண்டும் வெற்றி பெற்றால், அமைச்சர், துணை முதல்வர் என குறிவைத்து காய்களை நகர்த்தி வரும் கனிமொழிக்கு திமுக சீனியர்கள் முழு ஆதரவை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் முதல்வர் முக ஸ்டலினுக்கு அடுத்த யார் என்கிற அதிகார போட்டியில் உதயநிதி – கனிமொழி இருவருக்கும் இடையிலான போட்டியில் எதிர்காலத்தில் கனிமொழிக்கே தலைமை பொறுப்புக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் திமுக உள்ளே இருக்கும் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி டெல்லியில் உள்ளவர்கள் ஆசியும் கனிமொழிக்கே இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு பின்பு மாநில அரசியலில் கனிமொழி என்ட்ரி கொடுத்த பின்பு, அதிகார போட்டியில் உதயநிதி – கனிமொழிக்கு இடையிலான முதல் உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.