காட்டி கொடுத்த கரூர் வீடியோ ஆதாரம்… போட்டு கொடுத்த தவெக நிர்வாகி… சிபிஐ வலையில் விஜய் …

0
Follow on Google News

கரூர் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணை தீவிரம் எடுத்துள்ள நிலையில், காவல் துரை தரப்பிலும், தவெக தரப்பிலும் மாற்றி மாற்றி டெல்லியில் விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ. நிலையில் கரூர் சம்பவம் நடந்த போது கூட்டம் அதிகமானபோது தடுக்காதது, விஜய் வந்த வாகனத்தை தவறாக வழிநடத்தியது எலலாமே கவல்த்துறை தான் மேலும் விஜய் 12 மணிக்கு வருவார் என நாங்கள் சொல்லவில்லை, 12 மணி முதல் கூட்டம் வரும் என்றே தவெக வினர் தெரிவித்து இருந்தனர்.

இக்குற்றச்சாட்டுகளை கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்ததுடன், கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலம் தவெகவினருக்கு முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் காவல்துறை விளக்கமளித்து இருந்தது. இப்படி தவெக மற்றும் காவல்துறை இருவருக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகள் குறித்த உண்மை தன்மை சிபிஐ விசாரணை மூலம் வெளியாக தொடங்கி இருக்கிறது.

டெல்லியில் நடந்து வரும் சிபிஐ விசாரணையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகிய தவெக நிர்வாகிகளிடம் கிடுக்குப்பிடியான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.சென்னையில் காலதாமதமாகப் புறப்பட்டது, அதிக அளவிலான கூட்டம் சேர்ந்த பிறகும் விரைந்து செல்லாமல் இருந்தது, காவல்துறை கூறிய பிறகும் வாகனத்தை நிறுத்தாமல் முன்னேறிச் சென்றது போன்றவற்றிற்கு யார் காரணம் என்று சிபிஐ விசாரணையில் கேட்க பட்டிருக்கிறது.

அதற்கு புஸ்ஸி ஆனந்த், கரூரில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு தேதியை முன்கூட்டியே தேர்ந்தெடுத்தது மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைத் தேர்வு செய்ததற்கு மட்டுமே நான் பொறுப்பு.மற்றபடி அனைத்து விவகாரங்களையும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் ஆகியோர்தான் பார்த்துக் கொண்டனர் என சிபிஐ அதிகாரிகளிடம் மற்ற இரு த வெ க நிர்வாகிகளை கையை கட்டிவிட்டு எஸ்கேப் ஆகி இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.

இதனை தொடர்ந்து ஆதவா அர்ஜுனா, நிர்மல் குமார் இருவரிடம் கேள்வி எழுப்பிய போது, அவர்களும் மாற்றி மாற்றி இது எனக்கு தெரியாது, அவர் தான் என மாற்றி மாற்றி கையை காண்பிக்க, ஒரு கட்டத்தில் சிபிஐ அதிகாரிகளே குழம்பி போய் விட்டார்களாம். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவிடம், சிபிஐ அதிகாரிகள், “உங்களை போலீஸார் சீக்கிரமாக வரச்சொன்னார்களே, பிறகு ஏன் ஒரே இடத்தில் வண்டியை நீண்ட நேரமாக நிறுத்திகிட்டு இருந்தீங்கள் என கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு ஆதவ் அர்ஜுனா, எங்களிடம் போலீஸார் கூட்டம் நெரிசல் இருப்பது குறித்தெல்லாம் எந்த தகவலையும் சொல்லலை” என பதிலளிக்க, உடனே சிபிஐ அதிகாரிகள், விஜய்யோட பிரச்சார பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போட்டு காண்பித்து, ஆதவ் அர்ஜுனாவுடன் காவல் துறை அதிகாரிகள் பேசி கொண்டிருப்பதை காட்டி இருக்கிறார்கள்.

அந்த வீடியோவில் போலீஸார் சீக்கிரமா விஜய்யை வாகனத்தில் இருந்து வெளியே வரச் சொல்லியதாகவும், மேலும் வாகனத்தையும் வேலுச்சாமிபுரத்திலேயே நிறுத்த சொல்லி இருக்கிறார்கள், அப்போது ஆதவ் த வெ க வினர் தான் மக்கள் கூட்டத்திற்குள் விஜய் பஸ்ஸை விட சொல்லி இருப்பதாக அந்த வீடியோ கட்சியில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை பார்த்து சற்று சாக் ஆகிவிட்டாராம் ஆதவா அர்ஜுனா.

இந்நிலையில் அடுத்த இரண்டு வாரத்தில் த வெ க தலைவர் விஜய்க்கு முறையாக சம்மன் அனுப்பி விசாரணையை மேற்கொள்ள இவர்கிறார்கள் சிபிஐ அதிகாரிகள் என்கிற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், கரூர் விவகாரத்தில் தற்போதைய சிபிஐ விசாரணை த வெ கவுக்கு எதிராக திரும்பி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.