மலேசியாவில் நடந்த தவெக – காங்கிரஸ் ரகசிய டீலிங்… திமுகவுக்கு விபூதி அடித்த ராகுல்… நம்பி மோசம் போன ஸ்டாலின்…

0
Follow on Google News

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுகவிடம் கெஞ்சி கூத்தாடி, பல குட்டி காரணம் போட்டு 25 தொகுதிகளை பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, தற்பொழுது திமுகவுக்கே தண்ணீ காட்ட தொடங்கி இருக்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு இப்படி ஒரு தைரியம் வருவதற்கு முக்கிய காரணம், விஜய் தொடங்கி இருக்கும் த வெ க தான், அதாவது தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்து பேசி கடைசி நேரத்தில் கடந்த 2021 தேர்தலின் ஏமார்ந்தது போன்று ஏமார்ந்து விட கூடாது என்பதால் முன்னெச்செரிக்கையாக காங்கிரஸ் டெல்லி தலைமை பல அரசியல் நகர்வுகளை திமுகவுக்கு எதிராக நகர்த்தி வருகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு தரப்பினர் திமுகவுக்கு ஆதரவாக பேச வைப்பது போன்று பேச வைத்து, திருச்சி வேலுச்சாமி, பிரவின் சக்கரவர்த்தி போன்ற தலைவர்களை திமுகவுக்கு எதிராக பேச வைத்து வருகிறது காங்கிரஸ் டெல்லி தலைமை. காரணம் திமுகவை எதிர்கட்சிகள் கூட இந்த அளவுக்கு விமர்சனம் செய்ய முடியாது என்று சொல்லும் அளவுக்கு, மிக கடுமையாக தொடர்ந்து திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார் திருச்சி வேலுச்சாமி.

இவரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருவதற்கு முக்கிய காரணமே, இவரை பேச சொல்வதே காங்கிரஸ் தலைமை தான், அப்படி இருக்கையில், எப்படி காங்கிரஸ் திருச்சி வேலுச்சாமி மீது நடவடிக்கை எடுக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்நிலையில் கடந்து சில வாரங்களுக்கு முன்பு திமுக தலைவர் முக ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் 5வர் குழு சந்தித்து பேசியது.

அதாவது வரும் சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என்றால் திமுகவிடம் 60 தொகுதிகள் கேட்க வேண்டும் என்கிற முடிவில் , காங்கிரஸ் கட்சியின் 5வர் குழு 60 தொகுதிகள் கேட்டதாக கூறப்படுகிறது, ஆனால் இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கவில்லையாம். மேலும் காங்கிரஸ் 5வர் குழு ஒருபக்கம் முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்க மறுபக்கம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை பனையூரில் ரகசியமாக சந்தித்து பேசி இருக்கிறார்.

இந்த இரண்டு சந்திப்புமே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் அரசியல் நகர்வுகள் தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதி கொடுத்ததே அதிகம், இதற்கு மேல் அதிகம் தொகுதி வேண்டும் என்றால், கூட்டணியை விட்டு வெளியே செல்லட்டும் என்கிற முடிவில் இருக்கிறாராம் முதல்வர் முக ஸ்டாலின்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் பிரவீன் சக்கரவர்த்தி திமுக எம்பி கனிமொழி கருத்துக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் வகையில் திமுக அரசின் கீழ் தமிழகம் கடனில் மூழ்கி ததத்தளிக்கிறது என விமர்சனம் செய்தது கூட்டணிக்குள் மிக பெரிய புகைச்சளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சமிப்பதில் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவுக்காக விஜய் மலேசியா சென்று இருந்தார்.

அப்போது மலேசியாவில் இருந்த விஜய்யை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணி குறித்து பேசிய தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் பிரவீன் சக்கரவர்த்தி தரப்பில் விஜய்யை சந்திக்க நான்கு நபரை மலேசியாவுக்கு அனுப்பி இருக்கிறார், அவர்களும் விஜய்யை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்கள். இது மட்டுமின்றி கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு டெல்லியில் ஆஜராகி இருக்கும் த வெ க நிர்வாகிகளுக்கு தேவையான உதவிகளை டெல்லியில் செய்து வருவது ராகுல் காந்திக்கு நெருக்கமான KV பைஜூ என்கிற காங்கிரஸ் முக்கிய புள்ளி தான் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் த வெ க – காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.