விசாரணை வளையத்துக்குள் செந்தில் பாலாஜி… விஜய் கொடுத்த வாக்குமூலம்… கரூர் விவகாரத்தில் CBI அதிரடி…

0
Follow on Google News

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தீவிரம் எடுத்து வரும் நிலையில் த வெ க நிர்வாகிகள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. தமிழ்கத்தில் இருந்து சுமார் 8 பேர் டெல்லியில் உள்ள சி பி ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் ஒரே நேரத்தில் 8 நபர்களிடமும், தனிதனியாக , தனி தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு, ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் கரூர் விவகாரம் விசாரணை எந்த கட்டத்தில் உள்ளது என்கிற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும், அந்த வகையில் டெல்லியில் நடந்து வரும் சிபிஐ விசாரணை குறித்து சேகரிக்கப்பட்டுள்ள தகவல் அறிக்கையாக வரும் ஜனவரி 5ம் தேதி சமர்ப்பிக்க பட இருப்பதால், வரும் ஜனவரி 5ம் தேதி கரூர் விவகாரம் குறித்து பல திடுக்கிடும் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கரூரில் சிபிஐ அலுவலகம் அமைத்து விசாரித்து வருகிறது, மேலும் சென்னையில் சிபிஐ அலுவலகம் உள்ளது, இப்படி இருக்கையில் எதற்காக த வெ க நிர்வாகிகள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்த படுகிறார்கள் என்கிற குழப்பம் நீட்டித்து வருகிறார். மேலும் தற்பொழுது த வெ க நிர்வாகிகளிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அடுத்து விஜய்க்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைக்க சிபிஐ தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் சம்பவம் நடந்த பிறகு விஜய் வெளியிட்ட வீடியோ, அதன் பின்பு நிகழ்ச்சியில் பேசிய பேச்சுக்கள் என அனைத்தையும் மிக தீவிரமாக கண்காணித்து வருகிறது சிபிஐ, இந்நிலையில் விஜய் தொடர்ந்து கரூர் விவகாரத்தில் திமுக மீது பல குற்றசாட்டுகளை தெரிவித்து வருவதால், இந்த குற்றசாட்டு அனைத்தும் சிபிஐ விசாரணையில் விஜய்யிடம் கேட்க படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கரூர் விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, கரூர் சம்பவம் குறித்து பல தகவலை தெரிவித்து இருந்தார். இது அனைத்துமே சிபிஐ நோட் செய்து வைத்திருக்கிறது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செந்தில்பாலாஜி கரூர் விவகாரம் குறித்து தெரிவித்த கருத்தின் அடிப்படையில் அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருவதற்கு முடிவு செய்துள்ளது சிபிஐ.

அந்த வகையில் விஜய்க்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவைத்து விசாரணையை மேற்கொள்ள இருக்கும் சிபிஐ அதிகாரிகள், விஜய்யிடம் விசாரணை நடத்தி முடித்த பின்பு, செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவைத்து விசாரணையை மேற்கொள்ள சிபிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கரூர் விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் பல சிபிஐ அதிகாரிகள் பார்வை செந்தில் பாலாஜி பக்கம் திருப்பி இருக்கிறது.

இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கரூர் விவகாரம் குறித்த சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்து வருகிறது, அந்த வகையில் தேர்தல் நெருக்கும் நேரத்தில் சிபிஐ விசாரணை இறுதி கட்டத்தை எட்டி, கரூர் துயர சம்பவத்துக்கு காரணம், விஜய் மீது உள்ள தவறா.? அல்லது திமுக அரசு மீது உள்ள தவறா .? என்பதை சிபிஐ வெளியிட இருக்கும் அறிக்கை தமிழக தேர்தல் களத்தில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

இந்நிலையில் சிபிஐ விசாரணை டெல்லியில் நடைபெற்று வருவது அரசியல் களத்தில் விஜயை பாஜக அடிபணிய வைக்க தான் என கருத்துக்கள் உலா வந்தாலும் கூட , அதெல்லாம் பொய்யான தகவல் என உறுதி படுகிறது டெல்லி வட்டாரங்கள்.