தொடர்ந்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்து வருகின்றவர் பாஜகவால் நீக்கப்பட்ட கல்யாண ராமன், இந்நிலையில் அண்ணாமலை இமேஜை டேமேஜ் செய்யும் வகையில், பாஜக தொண்டர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு அவ பெயரை ஏற்படுத்தி அண்ணாமலையை வெறுப்படைய செய்யும் முயற்சி இப்படி அண்ணாமலை மீது தொடர்ந்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் விமர்சனம் செய்து வருவதற்கு காரணம் என்கிறது பாஜக வட்டாரங்கள்.
எனது பெயரோ கல்யாண ராமன் மங்களகரமான பெயர் ஆனால் இவன் கடந்து வந்த பாதையை பார்த்தால் என பராசக்தி படத்தில் சிவாஜிகணேசன் பேசிய வசனம் போன்று, பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால், இவர் இதற்கு முன்பு பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர் ராஜன் மாநில தலைவராக இருந்த போது அவரையும் கூட மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார்.

குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கு தடையாக இருந்தது கல்யாண ராமன் போன்ற வர்கள் தான் என்பது கல்யாண ராமனின் கடந்த கால சில்லறை தனமான செயல்கள் உறுதி படுத்துகிறது. தன்னை எதோ ஒரு விதத்தில் பிரபல படுத்த வேண்டும் என்பதற்காக யாரையாவது வம்பிழுத்து, அதில் வரும் எதிர்ப்பின் மூலம் தன்னை பிரபலப்படுத்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறன்றவர் தான் கல்யாணராமன்.
பாஜக சிறுபான்மை மக்களுக்கு எதிரான கட்சி என்கிற போலி பிம்பத்தை உடைக்க பாஜக தலைவர்கள் கடுமையாக போராடி கொண்டிருக்கையில், கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த மேட்டுப்பாளையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்யாணராமன் , இஸ்லாமியர்கள் மத குருவான நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதோடு, இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மதப் பிரச்சினையை தூண்டும் வகையில் தரக்குறைவாக, இழிவுபடுத்தும் வகையில் பேசிய பேச்சு பாஜகவில் இருக்கும் இஸ்லாமியருக்கே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக பாஜகவை நோக்கி இஸ்லாமியர்கள் வரும் சூழலில், கல்யாண ராமனின் இந்த பேச்சு திமுகவின் பாஜக எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு உதவுவது போன்று அமைந்து இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு பின்பே பாஜக நிகழ்வுகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த கல்யாண ராமன், படி படியாக ஓரம்கட்டப்பட்டார். இது மட்டுமின்றி, இதற்கு முன்பு அன்புமணி ராமதாஸை வம்பிழுத்து தன்னை முன்னிலை படுத்த முயற்சித்த கல்யாண ராமன் திட்டமும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் கல்யாண ராமன் மைக்கை பிடித்தாலே அது பாஜகவுக்கு எதிராக அமைந்து விடும், அதாவது பாஜக வளர்ச்சியை தடுக்க திமுக போன்ற எதிர்க்கட்சிகள் தேவையில்லை , கல்யாண ராமன் போன்றவர்கள் போதும் என்கிற சூழலில் பாஜகவில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள கல்யாண ராமன், தற்பொழுது எதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்மத்தை கக்கி வருகிறார், இவர்கள் பின்னால் இருந்து செயல்படுவது யார் என்கிற விவாதம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் பாஜக முன்னாள் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், தொடர்ந்து அண்ணாமலை மீது வன்மத்தை கக்கி வரும் கல்யாணராமன் மீது ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார், அதில் நீங்கள் வேலை வெட்டிக்கு ஏதும் செல்லாமல் எப்படி சோறு திங்கரீங்க.. அதுக்கு எங்க இருந்து பணம் வருது உங்கள் சொத்து மதிப்பு உங்கள் குடும்பம் பற்றி கூறிவிட்டு அண்ணன் அண்ணாமலை அவர்கள் பற்றி கேள்வி கேளுங்கள் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமனிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார் பழனி கனகராஜ்.
இந்நிலையில் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பி வரும் கல்யாணராமன், அதற்கு முன்பு பழனி கனகராஜ் எழுப்பிய நீங்கள் வேலை வெட்டிக்கு ஏதும் செல்லாமல் எப்படி சோறு திங்கரீங்க என்கிற கேள்விக்கு பதில் கூறவரா.? என பழனி கனகராஜ் கேள்வியை சுட்டி காட்டி , அதாவது உங்களுக்கு சோறு திங்க எங்க இருந்து பணம் வருகிறது என கல்யாணராமனை நோக்கி பலரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடதக்கது.

