இழுத்து மூடப்பட்ட ஓட்டல்… எல்லை மீறிய பெண்கள் சவகாசம்… போச்சா மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை…

0
Follow on Google News

பாலக்காட்டைச் சேர்ந்த சமையல்காரர் தங்கவேலு. அவரது மகன்தான் மாதம்பட்டி ரங்கராஜ். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட குடும்பத்தின் மொத்த பொறுப்பும் தங்கவேலு தோளுக்கு வந்துவிட்டது. தனது குடும்பத்தை காப்பாற்ற 18 வயதில் பெங்களூரில் ஓட்டலை தொடங்கி நடத்தி வந்தார் தங்கவேலு. ஆனால் அந்த நேரத்தில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அந்த ஓட்டல் இழுத்து மூடப்பட்டது.

இதையடுத்து கோவைக்கு வந்த தங்கவேலு பண்ணையில் வேலை செய்த ஒரு பெண்ணை குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கடமை இருந்ததால் கிடைத்த வேலைகளை எல்லாம் தங்கவேலு செய்து வந்தார். ஆனால் அவர் தனக்கு தெரிந்த சமையல் தொழிலை தொடங்கலாம் என்று முடிவு செய்து லட்சுமி கேட்டரிங் சர்வீஸ் சென்டர் பெயரில் கேட்டரிங் சர்வீஸ் சென்டர் தொடங்கி நடத்தி வந்தார்.

தங்கவேலுவின் மூத்த மகனான ரங்கராஜூக்கும் தந்தை போலவே சமையல் மீது ஆர்வம் இருந்தது. கோயம்புத்தூரில் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு வரை படித்த ரங்கராஜ் 10ம் வகுப்பு படிக்க டவுனில் இருக்கும் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். அந்த பள்ளியிலேயே திறமையான மாணவன் என்று பெயர் எடுத்த ரங்கராஜ் தந்தையின் ஆசைப்படி ராமகிருஷ்ணா கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் டெக்னாலஜி படித்தார்.

என்னதான் படித்திருந்தாலும் அப்பாவின் சமையல் தொழில் மீது இவருக்கு ஆர்வம் இருந்ததால் சமையல் பற்றிய படிப்பை படித்து அதில் சின்ன சின்ன நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். பிறகு 2002ம் ஆண்டில் சமையல் துறைக்குள் மாதம்பட்டி ரங்கராஜ் நுழைந்தார். அப்பா கற்றுக் கொடுத்த கைப்பக்குவம், அம்மாவின் ருசி, சமையல் மீது ரங்கராஜூக்கு இருந்த ஆர்வம் என அனைத்தும் சேர்ந்து ரங்கராஜை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

முன்னணி நடிகர் வீட்டு கல்யாணம் என்றாலும் அரசியல் பிரமுகரின் கல்யாணம் என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜன் தேதிக்காக பலரும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜ விருந்து கொடுத்து ஒட்டுமொத்த இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவர் ரங்கராஜ். இவரது கேட்டரிங் சர்வீஸ் மூலம் கிட்டத்தட்ட 5000 பேர் வேலை செய்கிறார்கள்.

அதில் எப்படி சமைப்பது என்று சொல்லித்தருவது மட்டும் இல்லாமல் உணவை எப்படி பரிமாற வேண்டும் என்பதையும் ரங்கராஜ் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். தொடர்ந்து விக்ரம் படம் வெற்றி விழாவில் மாதம்பட்டி ரங்கராஜ் உணவை ரசித்து சாப்பிட்ட நடிகர் கமல் அவரை புகழ்ந்து தள்ளிவிட்டார். அதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணம் ராஜமவுலி வீட்டு விசேஷம் அர்ஜூன் மகள் திருமணம் அரசியல்வாதிகள் வீட்டு விசேஷம் எதுவாக இருந்தாலும் அதில் மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கட்டாயம் இடம்பிடித்தது.

கடுமையாக உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி இருக்கும் போதே 2வது திருமணம் செய்து கொண்ட போட்டோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து திருமணம் செய்து கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிறிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அல்லும் பகலும் கடுமையாக உழைத்து சாதனை படைத்த ரங்கராஜ் இப்படி பெண் விவகாரத்தில் சிக்கி அவரது வாழ்க்கையில் சறுக்கி பேரை கெடுத்துக் கொண்டதாக இணையத்தில் பலரும் பேசி வருகின்றனர்.