அமித்சா போட்ட கண்டிசன்… ஓகே சொன்ன எடப்பாடி… பாஜகவுக்கு 50 தொகுதிகள்…

0
Follow on Google News

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர் கொடி தூக்கி அதிமுகவின் உக்கட்சி பூசல் உச்சகட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், டெல்லி சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, அங்கே துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

கடந்த சில நாட்களாகவே மீண்டும் பாஜகவுடன் டிடிவி தினகரன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது ஓ பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோரை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே டெல்லி பாஜகவின் விருப்பமாகவும் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாஜக மட்டுமே குறைந்தது 50 சீட்டில் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தமிழக பாஜக தலைமைக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மொத்தம் 38 மாவட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ஒரு தொகுதியை பாஜக உறுதிப்படுத்த வேண்டும், ஒரு சில மாவட்டங்களில் இரண்டு தொகுதிகள் கேட்டு பெற வேண்டும, மொத்தம் 50 தொகுதிகளில் பாஜக மட்டுமே வரும் 2026 சட்டசபை தேர்தல் இல் போட்டியிட வேண்டும் என அமித்ஷா தமிழக பாஜக தலைமைக்கு அறிவுறுத்தி உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அதிமுகவில் கூடுதலாக 25 தொகுதிகளை பெற்று அதை டிடிவி தினகரன் ஓபிஎஸ் மற்றும் இதர தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பது அமித்ஷாவின் திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தேமுதிக மற்றும் பாமக இரண்டு கட்சிகளையும் பேசி கூட்டணிக்குள் கொண்டு வந்து கூட்டணியை உறுதி செய்யுங்கள் என அதிமுக தலைமைக்கு அமித்ஷா உத்தரவிட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து அன்புமணி மற்றும் பிரேமலதா இருவரிடம் தொடர்ந்து நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு இருக்கிறது, இதில் தேமுதிக அதிமுக கூட்டணிக்குள் வருவது உறுதி செய்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்புமணியும் அதிமுக கூட்டணிக்குள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ராமதாஸ் திமுக பக்கம் செல்ல இருப்பதால் அவரையும் சரி செய்யும்படி எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா உத்தரவு போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் தேமுதிக ஆகியோர் கூட்டணியில் இடம்பெறும் பட்சத்தில் அவர்களுக்கான தொகுதியை நேரடியாக அதிமுக ஒதுக்கும் என்றும், இதை நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியை டீல் செய்து கொள்வர் என்றும் டெல்லியில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தேர்தல் நெருங்கும் இறுதியில் வைகோ பாஜக கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது , அதற்கான பேச்சுவார்த்தையை வைகோ மகன் டெல்லியில் பாஜகவுடன் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது அமித்ஸாவிடம் முரண் பிடிக்காமல், தற்பொழுது அமித்ஷா என்ன சொன்னாலும் , ஓகே ஓகே என்பதை தவிர எடப்பாடியிடம் வேறு பதில் ஏதும் இல்லை என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. உட்கட்சி பிரச்சனை என பல சிக்கலில் சிக்கி இருக்கும் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு முன்பு 4 வருட அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜக தான் என்று பேசிவிட்டு சென்றது கூட, டெல்லி செல்வதற்கு முன்பு டெல்லியில் உள்ள பாஜக தலைவர்கள் மனம் குளிரும்படி இருக்கட்டும் என்கிற நோக்கில் தான் எடப்பாடி இப்படி பேசியதாக கூறப்படுகிறது.