வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. திமுகவின் பலமே அதன் கூட்டணி கட்சிகள் தான், ஆனால் தற்பொழுது கூட்டணி கட்சிகளால் தான் திமுகவுக்கு மிக பெரிய ஆபத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் அரங்கேற இருக்கிறது. கடந்த தேர்தல்களில் திமுக கொடுக்கும் தொகுதியி பெற்று கொண்டு போட்டியிட்ட கூட்டணி கட்சிகள், தற்பொழுது அதிக தொகுதி வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள்.
இதற்கு முன்பு திமுக – அதிமுக – பாஜக என்கிற மூன்று கூட்டணி தான், இதில் அதிமுக உடன் சேர்ந்தால் வெற்றி பெறமாட்டோம் என்கிற சூழல், பாஜக உடன் காங்கிரஸ் , விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி செல்ல முடியாது, அப்படி இருக்கையில் திமுகவை விட்டு விலகினால் இவர்களுக்கு வேறு நாதி இல்லை என்கிற சூழலில் திமுகவும் கூட்டணி கட்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இந்தா பிடி நாங்க கொடுக்கிற தான் தொகுதி என்கிற தோரணையில் இருந்தது திமுக.

ஆனால் தற்பொழுது விஜய் கட்சி தொடங்கியதும், எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றவர்களுக்கு ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என தெரிவிக்க, திமுக கூட்டணி காட்சிகள் விஜய் பக்க தங்கள் பார்வையை திருப்பி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ராகுல் காந்தியும் விஜயும் தொடர்ந்து பேச்சாரத்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் கேரளாவில் விஜய்க்கு இருக்கும் ஆதரவு மூலம் காங்கிரஸ் வெற்றி பெற்று கேரளாவில் ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸின் மூத்த தலைவர்களான கேசி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோ ராகுல் காந்தியை வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது, மேலும் தொடர்ந்து இரன்டு முறை கேரளாவில் ஆட்சியை இழந்துவிட்ட காங்கிரஸ் அடுத்த ஒரு முறை கேரளாவில் ஆட்சியை இழந்தால், கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கலாம் இல்லை என ராகுல்காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜயுடன் காங்கிரஸ் கைகோர்ப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று தகவல் வெளியாகிறது. மேலும் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கூடுதல் தொகுதிகளை விஜயிடம் பெற்று போட்டியிடலாம் என்றும், மேலும் நாம் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் கூட்டணிக்கு வருவதற்கு தயாராக இருப்பதாக ராகுல் காந்தியிடம் காங்கிரஸ் மூத்த தெரிவித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து விஜய் பக்கம் செல்லும் முடிவிலும் ராகுல் காந்தி இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தன்னுடைய மருமகன் சபரீசன் மூலம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அதற்காக தான் பிகாரில் நடந்த ராகுல் பேரணியில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் ராகுல் மனம் குளிரும் படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் பட்சத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில், இதற்கு முன்பு 2011 சட்டசபை தேர்தலில் எப்படி திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட தக்க வைக்க முடியாமல் பரிதாபத்திற்கு சென்றதோ, அதே போன்ற ஒரு நிலை 2026 சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு அரங்கேறும் என்கிறது தேர்தல் கணிப்புகள் .
மேலும் திமுக கூட்டணியில் இருந்து அதன் கூட்டணி கட்சிகள் வெளியேறி விஜய் உடன் கைகோர்த்தால், த வெ க மற்றும் அதிமுக கூட்டணிக்கான நேரடி போட்டியாக வரும் தேர்தல் களம் மாறும் என்றும் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் சூழல் உருவாகும் என கணிக்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

