சமையல் கலையில் புகழ்பெற்று விளங்கிய மாதம்பட்டி ரங்கராஜ் அதன்பிறகு காதல் கலையில் அவர் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் வீடியோக்களாக வெளியாகி சந்தி சிரிக்கும் அளவுக்கு இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக ஜாய் கிறிஸில்டாவை காதலித்து திருமணம் செய்து கர்ப்பமும் ஆக்கிவிட்டு அவரை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜின் புதிய வீடியோ ஒன்று இப்போது வெளியாகி தீயாக பரவி வருகிறது.
இரண்டு ஆண்டுகளாக ஜாய் கிறிஸில்டாவுடன் குடும்பம் நடத்திவிட்டு தற்போது அவரை பிரிந்து சென்றுவிட்டார் ரங்கராஜ் . இதனால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ஜாய் கிறிஸில்டா, தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு நியாயம் கேட்டும், தன்னை ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதுவரை அந்த புகார் குறித்து மாதம்பட்டி ரங்கராஜன் மீது எந்த நடவடிக்கையும் போலீசார் தரப்பில் எடுக்கப்படவில்லை. அதனால் டென்ஷனான நெட்டிசன்கள், ஆளும்கட்சியுடன் இணக்கமாக இருப்பதால் மாதம்பட்டி ரங்கராஜ் மீது எந்த நடவடிக்கையும் போலீஸ் தரப்பில் எடுக்கவில்லை. ஜாய் கிறிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது கொடுத்த அந்த புகாரையே கிடப்பில் போட்டு விட்டனர் என்றும் கூறி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ஜாய் கிறிஸில்டா, யூடியூப் சேனலில் கொடுத்துள்ள பேட்டி ஒன்று இப்போது செமையாக வைரல் ஆகி வருகிறது. தன் வீட்டில் இருந்துக்கொண்டு ஜாய் கிறிஸில்டா கொடுத்துள்ள அந்த நேர்காணலில், மாதம்பட்டி ங்கராஜ் தன்னிடம் எவ்வளவு பாசமாக அன்பாக பழகினார் என்பதற்கான பல ஆதாரங்களை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடு முழுவதும் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நிறைந்து காணப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மாதம்பட்டி ரங்கராஜ் வாங்கிய விருதுகள் அனைத்தும் கிறிஸில்டாவின் வீட்டில்தான் உள்ளது. தன்னிடம் இவ்வளவு நெருக்கமாக பழகிவிட்டு தற்போது தன்னை ஏமாற்றி விட்டு மாதம்பட்டி ரங்கராஜ் விலகி சென்று விட்டதாக ஜாய் கிறிஸில்டா கதறி அழுது கண்ணீர் சிந்துகிறார்.
மேலும் தனது மகளை அடித்து துன்புறுத்தியதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிறிஸ்டிலாவின் அம்மாவும் புகார் தெரிவித்துள்ளார். இப்படிபட்ட பல புகார்களை அவர்கள் தெரிவித்து வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் இன்னும் தனது தரப்பு விளக்கத்தை தராமல் மவுனம் காத்து வருவதுதான் அதிசயமாக உள்ளது.
இதற்கிடையே ஜாய் கிறிஸில்டா, அவருடைய பிறந்த நாளுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் நிகழ்வையும் தற்போது வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கடற்கரைக்கு மாதம்பட்டி ரங்கராஜை கண்களை கட்டி அவர் அழைத்துச் செல்கிறார். ஹேப்பி கிறிஸில்டா என மின்விளக்குகளால் அலங்காரம் செய்து எழுதிய வெளிச்சத்தில், வெடி வெடித்து கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
அப்போது மாதம்பட்டி ரங்கராஜ், மண்டியிட்டு அவருக்கு ப்ரபோஸ் செய்தது மட்டுமின்றி பல ஜென்மம் தாண்டி வந்த உறவே எனக் கூறி கையில் இருக்கும் பூங்கொத்தை ஜாய் கிறிஸில்டாவிடம் நீட்டியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இப்படி அடிக்கடி ஏராளமான வீடியோ எடுக்கிற அளவுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிறிஸில்டாவுடன் வாழ்ந்து இருக்கிறாரே? இப்போது ஏன் விலகி சென்றார் என்று பலரும் கமெண்ட் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

