முடிந்தது சிவகார்த்திகேயன் சோலி… 30 கோடி நஷ்டம்… அடேய் கொஞ்ச நஞ்சம் அட்டமா ஆடுன…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் ஒரு அபரிமிதமான வளர்ச்சியை கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். அறிமுகமான மெரினா படத்தில் அவரது சம்பளம் வெறும் 10 ஆயிரம் ரூபாய்தான். ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அவர் நடித்து வரும் பராசக்தி என்ற படத்தில் அவரது சம்பளம் 70 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக, முக்கிய மைல் கல்லாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அமைந்தது.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்த படம் மதராஸி. இந்த படம் கடந்த 5ம் தேதி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

இந்நிலையில் மதராஸி படம் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு பலத்த நஷ்டத்தை கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்காக இயக்குனர் முருகதாஸ் 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.

ஆனால் இந்த படத்தில் புதிதாக ஏதாவது அவர் சொல்லி இருக்கிறாரா என்றால் எதுவுமே இல்லை. துப்பாக்கி படத்தை தூசி தட்டி அதில் தோட்டா எதுவும் போடாமல் மதராஸி என்ற ஒரு படமாக கொடுத்திருக்கிறார். இதுவரை வந்த 100 வருட தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகர் ஆக்சன் ஹீரோவாக மாறிய வரலாறு கிடையாது. அதை சிவகார்த்திகேயன் மதராஸி படத்தில் உடைத்து இருக்கிறார்.

அடுத்தடுத்து தனக்கான நல்ல படங்களை சிவகார்த்திகேயன் தேர்வு செய்தாலும் இந்த முறை மதராஸி படத்தில் அவருடைய கணக்கு ரொம்பவும் தப்பாகிவிட்டது. மதராஸி படத்தின் தயாரிப்பாளர் பெயர் பிரசாத். மதராஸி படத்தை தயாரித்த வகையில் அவருக்கு 30 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர் ஆந்திராவில் மிகவும் பிரபலமான ஒரு தயாரிப்பாளர். அவருடைய ஊர் திருப்பதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக இங்கே இருந்துதான் எல்லோரும் திருப்பதிக்கு போய் மொட்டை போட்டு விட்டு வருவார்கள். ஆனால் அவர் திருப்பதியில் இருந்து இங்கு வந்து இங்கே இருக்கிறவர்கள் அவருக்கு மொட்டை அடித்து விட்டார்கள். அதோடு அடித்து பிடித்து திருப்பதி போனவர்தான் இன்னும் திரும்ப வரவே இல்லை. இதுதான் இன்று மதராஸி திரைப்படத்தின் தயாரிப்பாளரின் அவலமான நிலை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தமிழில் கடைசியாக ரஜினியை வைத்து டைரக்ட் செய்த படம் தர்பார். அதே போல் இந்தியில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் அவர் இயக்கிய படம் சிக்கந்தர். இந்த 2 படங்களுமே மிக மோசமான தோல்வி படங்கள். அந்த வரிசையில் ரஜினி சல்மான்கானை தொடர்ந்து சிவகார்த்திகேயனையும் மதராஸி படத்தில் வெச்சு செய்துவிட்டார். ஆக்சன் ஹீரோவாக எஸ்கே அதகளம் காட்டியிருந்தாலும் கதை திரைக்கதையில் ஏஆர் முருகதாஸ் சொதப்பியதால், தயாரிப்பாளரின் சோலியை ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டார் என்றும் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.