திமுகவுக்கு எதிரான தீர்மானம்… காங்கிரஸ் உடன் கைகோர்த்த கம்யூனிஸ்ட்… சல்லி சல்லியாக உடையும் திமுக கூட்டணி…

0
Follow on Google News

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கோவில்பட்டியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு பல்வேறு தீர்மானங்கள் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உரிய காலத்தில் ஓய்வுக் கால பலன்கள் வழங்கப்படாதது அவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றில் உள்ள குளறுபடிகள்வருங்கால வைப்பு நிதி உரிய கணக்குகளில் செலுத்தப்படாதது

ஆகிய விவகாரங்களில் திமுக அரசை விமர்சித்து இடம்பெற்ற இத்தீர்மானங்களில் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு எதிராக நேரடியாகவே கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டிருக்கிறது.

மேலும் இந்த கோரிக்கைககள் தொடர்பாக நிதித்துறையுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக உறுதியளித்த தமிழக போக்குவரத்து துறை திமுக அமைச்சர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சரியல்ல என்பதை மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது. எனவும் அந்த கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.

திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் முன்னெப்போதும் இல்லாமல் கடந்த சில மாதங்களாக திமுக அரசை போகிற இடங்களில் எல்லாம் விமர்சித்து வருகிறது. சிலமாதங்களுக்கு முன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெ. சண்முகம் “ மாதம் ஒருமுறை மின் அளவீடு எடுப்பதாக அறிவித்தபடி திமுக நிறைவேற்றவில்லை என கருத்து தெரிவித்ததுடன் “ தொடர்ந்து திமுகவுடன் கூட்டணியில் அங்கம் வகி்பபதால் எங்களுக்கு வேறு இடத்தில் டிமாண்ட் இல்லை என்பதல்ல அர்த்தம்.

பாஜக அதிமுக கூட்டணியை வீழ்த்த இப்போதைக்கு திமுக வைத் தவிர வேறு வலியமையான கட்சி இல்லை என்பதே. அதற்காக திமுக தரும் இடங்களை பெற்றுக்கொண்டு போவோம் என நினைக்க கூடாது. பாஜக கூட்டணியை வீழ்த்துவது எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு நாங்கள் கூடுதல் இடங்களில் நிற்பதும் முக்கியம். அதனால் உறுதியாக எங்களுககுரிய தொகுதியை திமுகவிடம் கேட்டுப் பெறுவோம் என்று பெ. சண்முகம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது திமுக அரசுக்கு எதிராக நேரடியாகவே தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் சமீபகாலமாக திமுக அரசை விமர்சித்துப் பேசிவரும் நிலையில் இப்போது சிபிஎம் கட்சியும் திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிட்ஸ் ஆகிய கட்சிகள் வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிக சீட் தரவில்லை என்றால் கூட்டணியை விட்டு வெளியேறி வேறு கூட்டணி செல்ல தயாராக இருப்பதாகவும், அதனால் தான் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் கைகோர்த்து கொண்டு திமுகவுக்கு எதிராக அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.