நீதிமன்றம் அதிரடி உத்தரவு… மீண்டும் தட்டி தூக்கப்படும் செந்தில்பாலாஜி… டிரான்ஸ்பார்மர் ஊழலில் திடீர் திருப்பம்…

0
Follow on Google News

போக்குவரத்து துறையில் நடந்த ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்று திரும்பிய செந்தில்பாலாஜி , மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார், ஆனால் நீதிமன்றம் கொடுத்த கடும் நெருக்கடி காரணமாக செந்தில் பாலாஜி தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் தொடர்பான இடங்களில் சோதனை மேற்கொண்ட போது செந்தில் பாலாஜிக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது.

காரணம் ஏற்கனவே போக்குவரத்து துறை ஊழலில் சுமார் 400 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் தனக்கு குறிவைக்கப்படுகிறது என்கின்ற ஒரு அச்சம் ஏற்பட்டது. உடனே அப்போது அவசர அவசரமாக டெல்லி சென்றார் செந்தில் பாலாஜி. இப்படி அவசர அவசரமாக செந்தில் பாலாஜி இரவு டெல்லி சென்றதற்கு முக்கிய நோக்கமே அவர் பாஜகவிடம் சரண்டராக தான் என்று அப்போது கூறப்பட்டது.

அதாவது செந்தில் பாலாஜிக்கும் தொழிலதிபர் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அந்த வகையில் அதானி மூலமாக செந்தில் பாலாஜி பாஜகவுடன் திரை மறைவில் தொடர்பில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தன்னை காப்பாற்றி கொள்ள பாஜகவிடம் சரண்டராகி விட்டார் என தகவல் வெளியானது, ஆனால் திமுகவின் கொங்கு மண்டல தளபதி என்று அழைக்கப்படும் செந்தில் பாலாஜி அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தது டெல்லி பாஜக.

இந்நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் கரூரில் நடந்த முப்பெரும் விழாவை செந்தில் பாலாஜி நடத்தியது, சமீப காலமாக சற்று அமைதியாக இருந்த செந்தில் பாலாஜி மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பது போன்று அமைந்தது. ஆனால் அதற்கெல்லாம் ஆப்பு வைப்பது போன்று அமைந்து விட்டது தற்பொழுது செந்தில்பாலாஜிக்கு எதிராக நீதிமன்றம் கொடுத்துள்ள அதிரடி உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தமிழகத்தில் 2021 – 23-ம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய, 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளன. உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவ்வழக்கில் இறுதி விசாரணை அக்டோபர் 15-ந் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனேவே போக்குவரத்து துறை ஊழலில் சிக்கி சிறை சென்று வந்த செந்தில் பாலாஜி, டாஸ்மாக் ஊழல் ஒருபக்கம் இருக்க தற்பொழுது டிரான்ஸ்பார்மர்கள் ஊழல் தூசி தட்டப்பட்டு இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 15-ந் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது, செந்தில் பாலாஜிக்கு இடியாய் இறங்கிய செய்தி போல் அமைத்துள்ளது.