கோவையை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை இரண்டாவது திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸில்டா, சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிறிஸில்டா விவகாரம் குறித்து ஒரு தனியார் சேனல் நேர்காணலில் பங்கேற்ற பாடகி சுசித்ரா காரசாரமாக பேசியிருக்கிறார். இந்த நேர்காணலில் பாடகி சுசித்ரா கூறியதாவது, மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸில்டா திருமணத்தை தேவதாசி கல்யாணம் என்றுதான் சொல்ல வேண்டும். இவையெல்லாம் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். இதை திருமணமாகவே ஏற்றுக்கொள்ள முடியாது.

வேண்டுமானால் ஜாய் கிறிஸில்டா பொண்டாட்டி என்கிற அங்கீகாரம் இல்லாமல் வாழலாம். ஏனென்றால் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி அவரை விவாகரத்து செய்ய மாட்டார். குழந்தை பிறந்த பிறகு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அது ரங்கராஜின் குழந்தை என்பதை நிரூபித்தால் மட்டும்தான் அது ரங்கராஜின் குழந்தையாக முடியும். அதன் பிறகு தான் அந்த குழந்தையை வளர்ப்பதற்கோ வாழ்க்கைக்கோ ரங்கராஜ் பணம் தர வாய்ப்பு இருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் நம் இருவருக்கும் குழந்தை வேண்டாம், மனைவியாக மட்டும் இருந்து கொள் என்று திட்டத்தோடு தான் இருவரும் வாழ்ந்து வந்தார்கள். இந்த நிபந்தனையை மீறி ஜாய் கிறிஸில்டா பெரிய திட்டம் போட்டு பிளான் செய்து கர்ப்பமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அப்படி இருக்கும்போது அவருடன் தான் வாழ்வேன் என்று ஜாய் சொல்வதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது.
ஜாய் கிறிஸில்டா முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ரங்கராஜூடன் வாழ்ந்து இருக்கிறார். இப்படிப்பட்ட பெண்ணுடன் எப்படி ரங்கராஜ் வாழ்வார்? இந்த வீட்டில் நான் அவருடன் இப்படி வாழ்ந்தேன், அப்படி வாழ்ந்தேன், அவருக்காக என் வேலையை விட்டேன் என்று ஜாய் கிறிஸில்டா சொல்வது எல்லாமே திட்டமிட்டு செய்த வேலைதான். ஜாய் கிறிஸில்டா யார் என்று தெரியாமல் மாதம்பட்டி ரங்கராஜ் அவரிடம் மாட்டிக்கொண்டார்.
ஜாய் கிறிஸில்டா நடிகர் விஜய்க்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்த போது அவரிடம் ஏதோ சில்மிஷம் செய்ய அவர் அடித்து துரத்தினார். அதன்பிறகு எந்த ஒரு டாப் நடிகருக்கும் இவர் ஆடை வடிவமைப்பாளராக செல்லவில்லை. வளர்ந்து வந்த நேரத்தில் தான் அனைவரும் ஜாய் கிறிஸில்டாவை அழைத்தார்கள். நடிகர் விஜயிடம் சில்மிஷம் செய்த விஷயம் செய்த பிறகு அவரை யாரும் அழைக்கவில்லை.
இந்த தகவல் சினிமாத்துறையில் இருக்கும் பலருக்கும் தெரியும் என்று பாடகி சுசித்ரா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். பாடகி சுசித்ராவை பொறுத்த வரை பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய விஷயங்களை மட்டுமே அதிகமாக பேசுகிறார். அவர் சொல்வதில் எத்தனை சதவீதம் உண்மை என்பதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது.
ஜாய் கிறிஸில்டா நடிகர் விஜயிடம் சில்மிஷம் செய்தார் என்று சொல்வதெல்லாம் யாருமே கேட்டவுடன் அப்படியா என்று கேட்கும் ஒரு ஆச்சரியமான தகவலாக இருக்கிறதே தவிர யாருமே அறிந்த விஷயமாக இல்லை. இப்படி பிரபலங்கள் மீது அவதூறுகளை வதந்திகளை கொளுத்திப் போடுவதே சுசித்ராவின் வேலையாகி விட்டது என்று பலர் கூறினாலும், ஒரு சிலர் அது உண்மைதானோ என்று சந்தேகப்படவும் செய்கின்றனர்.

