சமீப காலமாகவே பாஜக சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த அண்ணாமலை, சமீபத்தில் அண்ணாமலையின் அரசியல் குருவான பிஎல் சந்தோஷ் தலைமையில் நடந்த சிந்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார், இந்த கூட்டத்தில் அண்ணாமலைக்கான முக்கியத்துவம் என்ன என்பது வெட்ட வெளிச்சமானது.
இந்த நிலையில் விரைவில் பாஜக புதிய தேசிய தலைவர் அறிவிப்பு வெளியானதும் அண்ணாமலைக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவியை உறுதி என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேசிய நிர்வாக பட்டியல் வரும் வரை அண்ணாமலை எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆலோசனைப்படி பி எல் சந்தோஷ் மூலம் சமீபத்தில் சென்னையில் நடந்த பாஜக சிந்தனை கூட்டத்தில் அண்ணாமலைக்கு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது நடப்பு அரசியல் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடிய பொறுப்பை அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை கொடுத்திருக்கிறது. மேலும் அண்ணாமலை மூலமே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரியப்படுத்தி இருக்கிறது டெல்லி பாஜக தலைமை.
இதன் மூலம் தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு முக்கியத்துவம் இல்லை, டெல்லி பாஜக அண்ணாமலையை ஓரங்கட்டி வருகிறது என்று ஒரு சிலர் பரப்பி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது டெல்லி பாஜக தலைமை. இந்த நிலையில் அண்ணாமலை பாஜக தலைவராக இருந்த போது தொடர்ந்து திமுகவுக்கு எதிராக அவர் செய்த அரசியல் ஒட்டுமொத்த திமுக கூடாரத்தையும் ஆட்டம் காண வைத்து தூங்க விடாமல் செய்தது.
அதேபோன்ற ஒரு நிலையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதற்காக தான் அண்ணாமலைக்கு நடப்பு அரசியல் குறித்து மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய ஒரு பொறுப்பை கொடுத்திருக்கிறது டெல்லி தலைமை. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் கைவசம் இருக்கும் திமுக குறித்த பல உளவுத்துறை தகவல்கள் இனி அண்ணாமலை மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த இருக்கிறது பாஜக டெல்லி தலைமை.
அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த சிந்தனை கூட்டம் மற்றும் இதற்கு முன்பு அமித்ஷா கலந்து கொண்ட கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்குவது நம்மளுடைய கடமை என்று அண்ணாமலை பேசியதின், மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அண்ணாமலைக்கும் ஒரு சமூக உறவு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
அந்த வகையில் இனி வரும் காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ள இருக்கும் பிரச்சாரத்தில் அண்ணாமலையும் இடம் பெறுவார் என்றும், மேலும் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை இருவரும் கைகோர்க்கும் பொழுது கொங்கு மண்டலத்தில் முழுமையாக அதிமுக பாஜக கூட்டணி கைப்பற்றும் என்கிறது கருத்து கணிப்புகள். மேலும் சமீபத்தில் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் கரூரில் நடந்த திமுகவின் முப்பொரு விழாவில் காலி சேர்கள் முடிந்ததையும் பார்க்க முடிந்தது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தை பொறுத்த அளவு அதிமுக பாஜக கூட்டணிக்கு வலுவாக இருப்பதை உறுதி செய்கிறது அரசியல் களம்.
அதே போன்று கூட்டணியில் இருந்து விலகி சென்ற TTV தினகரன், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மீண்டும் கூட்டணிக்குள் வந்தால் தென் மாவட்டத்திலும் அதிமுக – பாஜக கூட்டணி மிக பெரிய வெற்றியை பெரும் என்கிறது அரசியல் களநிலவரம்.

