திமுகவின் மூத்த தலைவர் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திமுக உள்ளே ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்ற ஒரு பரபரப்பு நீடித்து வரும் நிலையில், துரைமுருகனால் தான் திமுகவுக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. மேலும் துரைமுருகனால் திமுகவே ஆபத்து ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில், திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்கிற பரபரப்பு கட்சியின் உள்ளே நீடித்து வருகிறது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் பொழுது வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார், அப்போது துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஓட்டு க்கு பணம் கொடுப்பதாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலின் அடிப்படையில் நடந்த அதிரடி சோதனையில் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் சுமார் 13 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

இதனால் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின் போது துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் 13 கோடி ரூபாய் கைப்பற்ற போது, அப்போது துரைமுருகன் திமுகவின் பொருளாளராக இருந்தார். இந்த நிலையில் திமுகவின் கட்சி பணம்தான் சோதனையின் போது கைப்பற்றப்பட்டதா என்கின்ற விவாதமும் எழுந்தது.
காரணம் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் என்கின்ற அடிப்படையில், திமுகவின் கட்சி பணம் துரைமுருகன் கட்டுப்பாட்டில் தான் இருக்கும், அந்த அடிப்படையில் கட்சி பணம் தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்கிற பரபரப்பு அப்போது அனல் பறந்தது. மேலும் இது திமுகவின் கட்சி பணம் என்றால், திமுகவுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு சிக்கல் ஏற்படுவது மட்டுமில்லாமல்,
திமுக தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு சூழல் உருவாகும், இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் நீதிமன்றத்தில் அவசர அவசரமாக அப்போது ஒரு மனு தாக்கல் செய்யப்படுகிறது, அந்த மனுவில் திமுக பொருளாளர் துரைமுருகன் வேறு, கதிர் ஆனந்த் தந்தை துரைமுருகன் வேறு என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இது துரைமுருகனை கழட்டி விட்டு திமுக கட்சியை காப்பாற்றி கொள்வதற்காக தான் இந்த மனுவை தாக்கல் செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் 13 கோடி கைப்பற்றிய வழக்கு ஒரு பக்கம் நிலுவையில் இருந்து வரும் நிலையில், ஏற்கனவே துரைமுருகன் மீது சொத்து குவிப்பு வழக்கு 2 உள்ளது. மேலும் 2013ஆம் ஆண்டு துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்ற 13 கோடி அனைத்தும் புதிய நோட்டுக்களாக இருந்தது, அப்போது திமுக ஆட்சியில் இல்லை, அந்த வகையில் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது துரைமுருகனுக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருந்தது என்பது அப்போது வெட்ட வெளிச்சமானது.
இந்த நிலையில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரிகளின் மற்றும் அவருக்கு சொந்தமான சொத்து மதிப்புகள் மட்டும் பினாமிகள் இல்லாமல் அவர் பெயரிலே மட்டும் சுமார் 500 முதல் 1000 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் துரைமுருகனை நீதிமன்றம் இறுக்கி பிடிக்கும்பொழுது திமுகவுக்கே மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் திமுக தரப்பில் 2019 ஆம் ஆண்டு துரைமுருகனுக்கு தொடர்புடைய இடங்களில் கைப்பற்ற பணம் தொடர்பான வழக்கு இறுதி தீர்ப்பின் பொழுது எங்களை கேட்காமல் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று திமுக தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

