பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்ட கேள்வி … கதறி அழுத விஜய்… என்னை மன்னித்து விடுங்கள்…

0
Follow on Google News

கரூர் துயரசம்பவத்துக்கு பின்பு , அடுத்த ஒரு சில நாட்களில் ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு, அமைதியாக இருந்து வந்தார் நடிகர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சென்று சந்திப்பாரா விஜய் என்கிற பரபரப்புக்கு மத்தியில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திப்பதற்காக கரூரில் உள்ள ஏதாவது ஒரு திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்யலாம் என முயற்சித்தார் விஜய்.

ஆனால் அதில் பாதுகாப்பு காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் கரூரில் திருமண மண்டபம் கிடைப்பதில் சிக்கல் உருவானதால் திருச்சிக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அங்கும் சிக்கல்கள் எழுந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் தெரிவிக்க நடிகர் விஜய் முடிவு செய்தார்.

அதன்படி கரூர் சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் கரூரில் இருந்து 6 சொகுசு பேருந்துகள் மூலம் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களில் 37 குடும்பத்தினர் மாமல்லபுரம் நட்சத்திர விடுதிக்கு வரவழைக்கப்பட்டனர். 4 பேர் குடும்பத்தினர் மட்டும் வீட்டில் பூஜை வைத்திருப்பதாக கூறி மாமல்லபுரத்திற்கு வரவில்லை. ஒவ்வொரு குடும்பங்களில் இருந்தும் 10 முதல் 13 பேர் வரை வந்திருந்தனர். காலை 8 மணிக்கு பனையூர் வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட விஜய், மாமல்லபுரம் நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்தார்.

காலை உணவுக்கு பிறகு விஜய், அவர்கள் தங்கியிருக்கும் ஒவ்வொரு அறைக்கும் சென்றிருக்கிறார்.. அங்கு வைக்கப்பட்டிருந்த இறந்தவர்களின் போட்டோக்களுக்கு விஜய் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.. பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் கண்ணீர் விட்டு பேசியிருக்கிறார்.. மேலும் நேரில் வந்து சந்திக்க முடியாததற்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய், பாதிக்கப்பட்ட மக்களை நிச்சயம் கரூருக்கு மீண்டும் வந்து நேரில் சந்திப்பதாகவும் விஜய் அவர்களிடம் வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் பேசும் போது, ‘என் மீது உங்களுக்கு கோபமாக இருக்கிறதா? என கேள்வி எழுப்பியவர் , என்னை மன்னித்து விடுங்கள். இந்த துயர சம்பவம் என் இதயத்தை நொறுக்கி விட்டது. இனி நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன். நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த உதவி தேவை என்றாலும் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என பாதிக்கப்பட்டவர்களிடம் விஜய் தெரிவித்து இருக்கிறார்.

மேலும், நான் உங்களை எல்லாம் கரூர் மாவட்டத்திற்கு வந்து சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று தான் திட்டமிட்டு இருந்தேன் அதற்கான முயற்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. மீண்டும் நான் கரூர் வருவேன். அப்போது உங்கள் வீட்டில் வந்து உங்களை சந்திப்பேன். உங்களுக்கு உறுதுணையாகவும் பக்கபலாகவும் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன் என விஜய் தெரிவித்து இருக்கிறார்.

விஜய் பேசியதை கேட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் கால், மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விஜயிடம் நீங்கள் கலங்காமல் தைரியமாக இருங்கள். துவண்டு போகாமல் மீண்டும் கட்சிப் பணியில் கவனம் செலுத்துங்கள் என தெரிவித்தவர்கள், நீங்கள் தான் அடுத்த முதலமைச்சர் ஆக வர வேண்டும் என்பதுதான் உயிரிழந்தவர்களின் ஆசையாக இருந்தது என பாதிக்கப்பட்ட குடுமபத்தை சேர்ந்தவர்கள் விஜய்யிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் சிலர் விஜயிடம் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியில் நீங்கள் போட்டியிட வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.