ராகுல் காந்தி – விஜய் 15 நிமிட பேச்சு… திமுகவுக்கு குட் பை… திமுகவுக்கு கை விட்டு போச்சு…

0
Follow on Google News

கூட்டணி பலம் இல்லாமல் திமுக வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை. கூட்டணி பலம் இல்லை என்றால் திமுக வெற்றி பெற முடியாது என்பது தான் அரசியல் எதார்த்தம். அந்த வகையில் தற்பொழுது திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை திமுக அல்லது அதிமுக இதை இரண்டு கட்சியை விட்டால் வேறு வழியில்லை என்கிற சூழலில் திமுக கொடுக்கும் தொகுதியை பெற்று கொண்டு கூட்டணியில் இடம் பெற்று இருந்தது.

ஆனால் விஜய் வருகைக்கு பின்பு காங்கிரசுக்கு திமுக இல்லை என்றால் விஜய் என்கிற வாய்ப்பு உருவாக்கி உள்ளது. இந்நிலையில் கரூர் விவகாரம் வரை விஜய் பாஜக உடன் கூட்டணி இல்லை, காங்கிரஸ் கட்சி உடன் தான் கூட்டணி என்கிற முடிவில் இருந்து வந்தார், ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு விஜய்யிடம் பிடி கொடுக்காமல் இருந்து வந்தது, ஆனால் கரூர் விவகாரத்திற்கு பின்பு , காங்கிரஸ் வரவில்லை என்றால் பாஜக உடன் கூட்டணி தயார் என விஜய் கதவை திறந்து வைத்தார்.

இது காங்கிரசுக்கு மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தியது, பாஜக உடன் விஜய் சென்று விட்டால், திமுகவை விட்டால் காங்கிரசுக்கு வேறு வாய்ப்பு இல்லை, திமுக கொடுக்கும் தொகுதியை வாங்கி கொண்டு போட்டியிட வேண்டும் என்கிற நிலை காங்கிரஸ் கட்சிக்கு. இப்படி ஒரு சூழலில், பாஜக கூட்டணிக்கு விஜய் செல்வதை தடுக்க, விஜய் உடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முன் வந்துள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி நேரடியாக விஜய்யிடம் பேசி இருக்கிறார்.

கரூர் சம்பவம் அரங்கேறிய சமயத்தில் ஒரு முறை விஜய்யிடம் பேசிய ராகுல் காந்தி, சமீபத்தில் இரண்டாவது முறையாக விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் பேசி இருக்கிறார். சுமார் 15 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்தையில் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திமுகவை விமர்சனம் செய்தும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருவதை பார்க்க முடிகிறது.

காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, கரூர் விவகாரத்தில் விஜய் மீது மட்டும் தவறு இருப்பதை ஏற்று கொள்ள முடியாது அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளது என தெரிவித்து இருந்தார், மேலும் கரூர் விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி , விஜய்யை கடுமையாக சாடி இருந்த நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி அரசியல் கட்சியை சேர்ந்தவர் போன்று பேசியுள்ளார் என விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார் கே எஸ் அழகிரி.

அதே போன்று சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கை நம்ம விட்டு செல்லாது என பேசியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி, கை இல்லாமல் ஊனமாக இருக்கிறார்கள், என கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். மேலும் திமுக உடன் மிக நெருக்கமான இருந்து வரும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் திமுகவுடன் மோதல் போக்கை கடை பிடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் செல்வப்பெருத்தகை தொகுதிக்குட்பட்ட அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தன்னை அழைக்க வில்லை என்ற விமர்சனம் செய்து இருந்தார், இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் கொடுக்க, அதற்கு மீண்டும் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுக்க , இப்படி செல்வப்பெருந்தகைக்கும் திமுகவுக்கு இடையிலான மோதலும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இப்படி காங்கிரஸ் தலைவர்கள் திமுகவை விமர்சனம் செய்வதற்கு பின்னணியில், விஜய் உடன் ராகுல் காந்தி கூட்டணியை உறுதி செய்துவிட்டார், அதனால் தான் திமுகவை விமர்சனம் செய்து அது பிரச்சனையாக வேண்டும்,அதை காரணமாக வைத்து காங்கிரஸ் வெளியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.