பெண்களை மோப்பம் பிடிக்கும் திவாகர்… பிக் பாஸ் வீட்டில் மன்மத லீலை… எல்லை மீறி போறிங்க…

0
Follow on Google News

குறிப்பாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களின் அநாகரிகமான செயல்பாடுகளும் அவர்கள் வெளிப்படுத்தும் மோசமான வார்த்தைகளும் இந்த நிகழ்ச்சியை கீழ்த்தரமாக விமர்சிக்கும் அளவிற்கு தரம் கெட்டுப் போயிருக்கிறது. அதிலும் பிக்பாஸ் போட்டியாளர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் பெண்கள் விஷயத்தில் நடந்துக்கொள்வதை சாதாரணமாக பார்க்காதீங்க விஜய் சேதுபதி என்று பலரும் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை படு மோசமாகி விட்டது.

பிக்பாஸ் 9 சீசன் நிகழ்ச்சியில் இப்போது போட்டியாளராக உள்ள வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் நல்லவர் என்று நேற்றைய எபிசோடில் விஜய் சேதுபதி தீர்ப்பு கூறியதை ஏற்கவே முடியாது என்கிறார்கள் பெரும்பாலானோர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்களிடம் திவாகர் பழகி வரும் விதம் பார்வையாளர்களை பலத்த எரிச்சலடைய வைத்திருக்கிறது. குறிப்பாக பெண்களை முகர்ந்து முகர்ந்து பார்த்து மோப்பம் பிடிப்பதை அவர் ஒரு வேலையாகவே செய்து வருகிறார்.

இந்நிலையில், திவாகரால் உங்களுக்கு இந்த வீட்டில் பாதுகாப்பு இல்லையா என்று நேற்றைய நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சக போட்டியாளர்களிடம் கேட்டார். அதற்கு அனைத்து பெண் போட்டியாளர்களும் ஒரே மாதிரி அப்படி எல்லாம் இல்லை என்று பதில் சொன்னார்கள். ஆனால் வார நாட்களில் திவாகரை பற்றி புலம்பிய பெண் போட்டியாளர்கள், விஜய் சேதுபதியிடம் ஏன் உண்மையைச் சொல்லவில்லை என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

திவாகர் பஃன்னியான ஆள் என்று சொல்லி அவர் செய்வதை எல்லாம் சாதாரண விஷயமாக்க எடுத்துக் கொள்ளாதீர்கள் பிக்பாஸ் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் கூறியிருக்கின்றனர். விஜே பார்வதி கம்ருதீன் உள்ளிட்டோர் படுக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பாரு தோள் மீது தலையை வைத்தார் திவாகர். அதைப் பார்த்த பார்வதி கடுப்பாகி, தள்ளித்தள்ளி போன பிறகும் அவரை திவாகர் விடவில்லை.

இந்த காட்சியை சுட்டிக்காட்டி இதுதான் வாட்டர் மெலன் திவாகர் செய்யும் நல்ல காரியமா என்று பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அரோரா வியானா ஆகியோரிடம் திவாகர் மோசமாக நடந்து கொண்ட காட்சிகளை சேர்த்து ஒரு வீடியோவாகி இதையெல்லாம் ஆதரிக்க வேண்டாம் பிக்பாஸ், விஜய் சேதுபதி என்றும் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். அரோரா மற்றும் அப்சராவை முகர்ந்து முகர்ந்து பார்த்தார் திவாகர். அரோராவின் உடம்பு முழுக்க வாசமாக இருப்பதாகவும் கூறினார்.

அதை டிவியில் பார்க்கும்போதே குமட்டிக் கொண்டு வந்தது. இது எல்லாம் உங்களுக்கு தவறாக தவறாகவே தெரியவில்லையா விஜய் சேதுபதி? அந்த ஆளுக்கு போய் ஆதரவாக பேசியிருக்கிறீர்களே என்று கடும் விமர்சனமும் எழுந்துள்ளது. பார்வதியை டார்லிங் என்று அழைப்பதும் அவரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் திவாகர் சொல்லிக் கொண்டிருக்கிறார். தங்கச்சி தங்கச்சி என்று சொல்லும் ஒரு பெண்ணை போய் கல்யாணம் செய்ய ஆசைப்படுவது சரியில்லை என்று திவாகரிடம் சக போட்டியாளர்கள் கூறியும் கூட அவர் அதை கண்டுகொள்ளவில்லை.

மேலும் திவாகர் கொடுக்கும் ஒரு சத்தம் க்ரீப்பியாக இருப்பதாக அரோரா கூறினார். அவர் சொல்வது சரிதான் என்று கானா வினோத்தும் கூறினார்.ஜொள்ளு பார்ட்டி திவாகரின் லொள்ளு எத்தனை நாள்தான் நீடிக்கும் என்று பிக்பாஸ் பார்வையாளர்களும் வெறுப்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.