முதல் குடும்பத்தை ஓரம் கட்டும் செந்தில் பாலாஜி… கடும் அப்செட்டில் முதல் குடும்பம்… சுயரூபத்தை காட்டிய செந்தில் பாலாஜி…

0
Follow on Google News

வரும் சட்டசபை தேர்தலுக்காக, மண்டல் வாரியாக திமுகவில் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. இதில் மேற்கு மண்டல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். மேற்கு மண்டலுக்கு உட்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 39 சட்டமன்ற தொகுதிகள் மேற்கு மண்டலுக்கு உட்பட்டு வருவதால், மொத்தம் 39 சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்க பட்ட செந்தில் பாலாஜி, திமுக மேற்கு மண்டலத்தை மெல்ல மெல்ல தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார் என்றே குமுறுகிறார்கள், மேற்கு மண்டல திமுக மூத்த உடன்பிறப்புகள்.

இந்த 39 சட்டமன்ற தொகுதியில் செந்தில் பாலாஜி யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் திமுக வேட்பாளர் என்கிற நிலை உருவாகி உள்ள நிலையில், செந்தில்பாலாஜி மனதில் இடம் பிடிக்க மேற்கு மண்டலத்தில் திமுகவினர் மத்தியில் கடும் போட்டி நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்பதற்காக, திமுக தலைவர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஏற்படும் அவமரியாதையை பொறுத்து கொள்ள முடியாமல் புலம்பி தவித்து வருகிறார்கள் மேற்கு மண்டல் உடன் பிறப்புகள்.

சமீபத்தில் செந்தில் பாலாஜி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட நிலையில், அந்த பிறந்தநாள் விழாவில், யார் செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசி என்று காட்டி, செந்தில் பாலாஜி மனதில் இடம் பிடிக்க போட்டி போட்டு திமுகவினரால் மேற்கு மண்டலத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இந்நிலையில் செந்தில்பாலாஜி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஒட்டப்பட்ட போஸ்டர், திமுகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அதில் ஒன்றிய திமுக செயலாளர் ஒருவர் வடிவமைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘மாண்புமிகு மேற்குமண்டலமே…’ எனக் குறிப்பிடப்பட்டு, செந்தில் பாலாஜியின் நான்கு படங்கள் மையப்பகுதியில் இடம்பெற்றும், திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி படங்கள் மேல் பகுதியில் சிறிதாகவும், பெரியார், அண்ணா, கருணாநிதி படங்கள், ‘ஸ்டாம்ப்’ சைசிலும் இருந்தது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்ப்படுத்தி இருந்தது.

இதேபோல், திமுக நிர்வாகி வாழ்த்து செய்தியில் திமுக தலைவர்கள் பெயர், படங்கள் இடம்பெறவில்லை. இந்த இரண்டு போஸ்டர்களை மேற்கு மண்டலத்தில் திமுகவினர் பகிர்ந்து தங்கள் வருத்தத்தை பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. செந்தில்பாலாஜிக்கு விசுவாசத்தை காண்பிக்க தலைவர் குடும்பத்தையே மறந்துட்டீங்களே, தலைவர் கருணாநிதி படம் இல்லாமல் போஸ்டர், முதல்வர் , துணை முதல்வர் புகைப்படம் சிறியதாக இருக்கிறது. மாற்று கட்சியில் இருந்து வந்த செந்தில்பாலாஜிக்கு என்ன தெரியும் நம் இயக்கத்தின் வரலாறு என குமுறி வருகிறார்கள் மூத்த உடன் பிறப்புகள்.

மேலும் செந்தில்பாலாஜி திமுகவை வளர்ப்பதை விட கொங்கு மண்டலத்தில் தன்னை முன்னிலை படுத்தி தனக்கான ஆதரவாளர்களை பெருக்கி வருகிறார், எதிர்காலத்தில் ஆட்சி மற்றம் ஏற்ப்பட்டால், தன் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க, தன்னுடைய மொத்த ஆதரவாளர்களையும் ஓன்று இணைந்து மாற்று கட்சிக்கு செல்ல கூட தயங்க மாட்டார், இதற்கு முன்பு பல கட்சி தாவி வந்தவர் தான் செந்தில் பாலாஜி, அதனால் முதல்வர் முக ஸ்டாலின் , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மூத்த திமுக உடன்பிறப்புகள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள்.

மேலும் மேற்கு மண்டலத்தில் நடக்கும் சில விரும்பத்தகாத செயல்களால் முதல் குடும்பமும் செந்தில்பாலாஜி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.