2026 தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் , தேர்தல் நெருங்க நெருங்க , தொடர்ந்து வெளியாகும் சர்வே ரிப்போர்ட் திமுகவுக்கு நாளுக்கு நாள் சரிவை ஏற்படுத்தி வருவதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக திமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்டு வரும் சென்னையிலே திமுக கோட்டையில் ஓட்டை விழுந்த கதையாக மாறி வருகிறது தேர்தல் களம்.
இந்நிலையில் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக முழுமையான வெற்றியை பெற்று இருந்தது, அதற்கு அடுத்தபடியாக தென் மாவட்டத்தில் கணிசமான வெற்றியை அதிமுக பெற்று இருந்தது, இதில் மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி திமுக கூட்டணி இரண்டும் 5/5 என்கிற விதத்தில் சம அளவில் வெற்றியை பெற்று இருந்தனர்.

இந்நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதியின் கள நிலவரம் குறித்த தகவல் வெளியாகி, திமுகவுக்கு மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது, அதுவரை நடந்த திமுக ஆட்சியில் மதுரை முக அழகிரியின் கோட்டை என்கிற ஒரு போலி பிம்பம் வெளியில் கட்டமைக்கப்பட்டது, 2006 முதல் 2011 வரை மதுரையில் நடந்த அணைத்து இடை தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது.
அந்த வகையில் 2011 சட்டசபை தேர்தலில் , முக அழகிரி கோட்டையான மதுரையில் உள்ள மொத்த தொகுதியில் திமுக வெற்றி பெரும் என்கிற ஒரு போலி பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்ட, 2011 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள 10 தொகுதியிலும் திமுக படு தோல்வி அடைந்து, மதுரையில் உள்ள மொத்த தொகுதியையும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று, முக அழகிரியின் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தது.
அதே போன்ற ஒரு நிலை தான் தற்பொழுது மீண்டும் மதுரையில் திமுகவுக்கு ஏற்பட இருக்கிறது என்கிறது கள நிலவரம். மதுரையில் உள்ள பத்து தொகுதியில் , திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலப்பட்டி, மேலூர், மதுரை மேற்கு ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக கைவசமும், மதுரை கிழக்கு , மதுரை, தெற்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தி, சோழவந்தான் ஆகிய தொகுதியில் திமுக கைவசமும் உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது அதிமுக கைவசம் உள்ள 5 தொகுதிகளில் மதுரை மேற்கு மட்டுமே இழுபறியில் உள்ளது மற்ற நான்கு தொகுதியிலும் மீண்டும் அதிமுக கூட்டணி வெற்றி பெறவே வாய்ப்புள்ளது என்கிறது கள நிலவரம். அதே போன்று திமுக கைவசம் இருக்கும் 5 தொகுதியில், மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் சரவணன் இம்முறை போட்டியிட இருக்கும் நிலையில், திமுக எம் எல் ஏ , கோ.தளபதியை எளிதாக வீழ்த்தி டாக்டர் சரவணன் வடக்கு தொகுதியை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளது.
அடுத்ததாக திமுக கூட்டணி கைவசம் இருக்கும் மதுரை தெற்கு தொகுதியில் இம்முறை அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக போட்டியிட இருக்கும் நிலையில், மதுரை தெற்கு தொகுதியை பாஜக மிக எளிதாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. அடுத்ததாக திமுக கைவசம் இருக்கும் சோழவந்தான் தனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் போட்டியிட இருப்பதால் கடும் இழுபறியில் உள்ளது,
அதற்கு அடுத்ததாக அமைச்சர் PTR சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மதுரை மத்திய தொகுதியில் அதிமுக – பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாறன் ஜி போட்டியிட இருப்பதால் மத்திய தொகுதியில் ஏற்கனவே PTR மீது இருக்கும் அதிருப்தி, மற்றும் திருமாறன் ஜி என்கிற பழமான வேட்பாளர் இவை அனைத்தும் திருமாறன் ஜி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது. மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி மட்டுமே மதுரையில் திமுக சார்பில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, அதுவும் அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணைந்தால், மதுரை கிழக்கு தொகுதியும் கடும் இழுபறிக்கு உள்ளாகும் என்கிறது தேர்தல் கள நிலவரம்.

