அடுத்த Target மதுரை மீனாட்சி அம்மன் கோவில்… அமைச்சர் மூர்த்தியின் பேராசை… திமுகவினரே கடும் எதிர்ப்பு….

0
Follow on Google News

அமைச்சர் மூர்த்தி மதுரையில் குறுநில மன்னர் போன்று செயல்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், அடுத்தடுத்து அமைச்சர் மூர்த்தியின் நடவடிக்கைகள் திமுகவிற்கு மதுரை மக்கள் மத்தியில் கடும் அவப்பெயரை பெற்று தந்துள்ளது. குறிப்பாக மதுரை திமுகவினர் மத்தியிலே மூர்த்திக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை உருவாக தொடங்கியுள்ளது. திமுக மீண்டும் வெற்றி பெற்றால் அமைச்சர் மூர்த்தி கை மீண்டும் ஓங்கும், அதனால் அமைச்சர் மூர்த்தியை அரசியலில் இருந்து வீழ்த்த வேண்டும் என்றால், மதுரையில் திமுக தோல்வி அடைய வேண்டும் என்கிற மனநிலையில் பல திமுகவினர் புலம்பி வருவதை பார்க்க முடிகிறது.

அந்த அளவுக்கு மதுரை திமுகவுக்குள் அமைச்சர் மூர்த்தியை அட்ராசிட்டி எல்லை மீறி உள்ளது என கூறப்படுகிறது. மதுரையில் உள்ள மொத்தம் மூன்று மாவட்ட செயலாளர்களில், அமைச்சர் மூர்த்தி மாவட்ட செயலாளராக இருக்கும் மாவட்டம் தவிர்த்து, கோ தளபதி மற்றும் மணிமாறன் ஆகியோர் இருக்கும் மாவட்டம் டம்மியாக இருப்பதிலே மிக கவனமாக இருப்பார், மேலும் மற்ற இரண்டு மாவட்டத்திலும் தன்னுடைய ஆதரவாளர்களை வளர்த்து விட்டு , கோ தளபதி மற்றும் மணிமாறன் இருவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு தன்னுடைய ஆதரவாளர்கள் மூலம் முட்டு கட்டை போட்டு வரக்கூடியவர் அமைச்சர் மூர்த்தி என கூறப்படுகிறது.

இப்படி மதுரை திமுகவில் அமைச்சர் மூர்த்தி கோஷ்டி, அமைச்சர் PTR கோஷ்டி, மணிமாறன் கோஷ்டி, கோ தளபதி கோஷ்டி என நான்கு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தாலும், துணை முதல்வர் உதயநிதி உடன் அமைச்சர் மூர்த்தி மிக நெருக்கமாக இருந்து வருவதால், மதுரையில் மற்ற மூன்று கோஷ்டிகளால் அமைச்சர் மூர்த்தியை மீறி எதுவும் செய்ய முடியாத சூழல் தான் உள்ளது.

இதில் திமுக் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் அமைச்சர் மூர்த்தி இருவருக்கும் இடையிலான கோஷ்டி பூசல் வெட்ட வெளிச்சமாக உள்ளது. மணிமாறனை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து காலி செய்ய வேண்டும், அங்கே தனக்கான ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என , தன்னுடைய தீவிர ஆதரவாளரார் ஒருவரை தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி மதுரை தெற்கு மாவட்ட துணை செயலாளராக கொண்டு வந்து மணிமாறனுக்கு கடுமையான குடைச்சலை கொடுத்து வந்தார் அமைச்சர் மூர்த்தி.

ஆனால் முதல்வர் மருமகன் சபரீசன் உடன் மணிமாறன் மிக நெருக்கமாக இருந்து வரும் நிலையில் மூர்த்தியை பாச்சா மணிமாறனிடம் பலிக்க வில்லை, இந்நிலையில் மணிமாறன் மாவட்டத்தில் திமுக துணை செயலாளராக இருந்த தன்னுடைய ஆதரவாளரை, வரும் சட்டசபை தேர்தலில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட வைப்பதற்காக தன்னுடைய மாவட்டத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக கொண்டு வந்துள்ளார் அமைச்சர் மூர்த்தி.

இது திமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தற்பொழுது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவராக இருக்கும் அமைச்சர் PTR தாயார் ருக்குமணி அம்மாள் பதவி காலம் முடிவடைய இருக்கும் நிலையில், அமைச்சர் மூர்த்தி அவருடைய மனைவி செல்லம்மாவை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவல் குழு தலைவராக கொண்டுவருவதற்காக முயற்சியில் இறங்கியுள்ள தகவல், திமுகவினர் மத்தியிலே கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி வருகிறது. இப்படி சொந்த கட்சியினர் மத்தியிலே அமைச்சர் மூர்த்தி கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும், இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டசபை தேர்தலில் மதுரையில் திமுக பலத்த அடி வாங்கும் என்கிறது மதுரை அரசியல் களநிலவரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here