நள்ளிரவில் டெல்லியில் நடந்த சந்திப்பு… அமித்ஷா சொன்ன மெசேஜ்…. மகிழ்ச்சியில் செங்கோட்டையன் ….

0
Follow on Google News

டெல்லி சென்ற செங்கோட்டையன் நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தற்பொழுது தமிழக அரசியலில் எதார்த்த கள நிலவரம் என்ன என்பது தெரியாமல் தன்னுடைய அரசியல் நகர்வுகளை நகர்த்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்ற ஒரு குழப்பம் கூட்டணி கட்சிகள் மத்தியில் நிறைவு வருகிறது.

1996 சட்டசபைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவே தோல்வியை சந்தித்து அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்த காலகட்டம் அது, அதே நேரத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அப்போது ஜெயலலிதாவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று போயஸ் கார்டன் வீட்டிற்கு வருமானவரித்துறை அனுப்பி செருப்பு புடவை என்று பட்டியிருத்தது.

மேலும் அன்றைக்கு திமுகவின் குடும்ப தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சி மக்களின் ஒரு அங்கமாக இருந்தது, திட்டமிட்டு ஜெயலலிதாவுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிர படுத்தியது, இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சூழலில் அதிமுகவையும் தன்னுடைய அரசியலையும் மீண்டும் நிலை நிறுத்துவதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு நேரடியாக சென்று ராமதாசை கூட்டணி அழைத்தார் ஜெயலலிதா.

வைகோவை நேரடியாக சந்தித்து கூட்டணிக்கு அழைத்தார், அப்போதைய பாஜக தலைவராக இருந்த இல கணேசனையும் நேரடியாக சந்தித்தார். இப்படி 1998 நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து 32 சீட்டுகளை அதிமுக கூட்டணி வெற்றி அடைந்தது, அதாவது ஜெயலலிதா தோல்வி அடைந்து அடுத்த இரண்டரை வருடத்தில் நடந்த தேர்தலில் மீண்டும் அதிமுகவையும் தன்னையும் நிலைநிறுத்திக் கொண்டவர் ஜெயலலிதா.

இதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா அமைத்த கூட்டணி, ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு எடப்பாடி தலைமையின் அதிமுக தொடர்ந்து பத்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் கூட்டணி கட்சிகளை அரவணைக்கும் தன்மை எடப்பாடி இடம் இல்லை என்கின்ற குற்றச்சாட்டு வருகிறது, மேலும் எடப்பாடியின் பிடிவாத குணத்தினால் அதிமுக மட்டுமல்ல எடப்பாடியின் அரசியல் வாழ்வும் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கின்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கைகள் அனைத்துமே திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வகையில் அமைந்துள்ளதால் தற்பொழுது செங்கோட்டையனை வைத்து அமித்ஷா தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் வெளியானதை தொடர்ந்து செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக எழுப்பிய கழக குரலுக்கு பின்னால் தற்பொழுது யார் என்று என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

சமீபத்தில் டெல்லி சென்ற செங்கோட்டையன் நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகிறது. அந்த வகையில் எடப்பாடியால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனை மத்திய உள்துறை அமைச்சர் சந்தித்து பேசுகிறார் என்றால், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தத்தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

மேலும் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையில் மாற்றம் இல்லை என்றால் எடப்பாடியை அப்புறப்படுத்தி விட்டு அதிமுகவின் தலைமை பீடத்தில் செங்கோட்டையனை அமர வைத்து வரும் 2021 தேர்தலில் சந்திக்கும் முடிவிலும் அமித்ஷா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.