எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி துக்கியுள்ள அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை அக்கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, இது அதிமுகவில் இருக்கும் எஸ் பி வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் உட்பட பல தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து டெல்லி பறந்த செங்கோட்டையன், அங்கே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியவர், பின்பு ஒரே காரில் நிர்மலா சீதாராமன் மற்றும் செங்கோட்டையன் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்று சந்தித்து இருக்கிறார்கள். அதிமுக உட்கட்சி விவகாரம், மற்றும் தமிழக அரசியல் நிலவரம் அனைத்தையும் மிக பெருமையாக கேட்டிருக்கிறார் அமித்ஷா.

அதிமுகவில் இருந்து வெளியே சென்ற ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுக உள்ளே கொண்டு வந்தால் மட்டுமே அதிமுக -பாஜக கூட்டணியால், வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க முடியும், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்த்தால், தனக்கு மிக பெரிய சிக்கல் ஏற்படும் என தன்னுடைய சுயலாபத்திற்காக, அதிமுக கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு செல்வது மட்டுமில்லாமல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் எடப்பாடி என அமித்ஷாவிடம் தெரிவித்து இருக்கிறார் செங்கோட்டையன்.
உடனே அமித்ஷா நீங்கள் தெரிவிக்கும் இந்த கருத்தை ஏற்று கொள்கிறேன், உங்களுக்கு ஆதரவாக உங்க கட்சியில் எத்தனை பேர் உள்ளார்கள் என அமித்சா கேட்க, அதற்கு எஸ் பி வேலுமணி, தங்கமணி, சி வி சண்முகம், விஜயபாஸ்கர் என முன்னாள் அமைச்சர்கள் சுமார் 10பேரை பட்டியலிட்டு இருக்கிறார் செங்கோட்டையன். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தென் மாவட்டத்தில் டெபாசிட் இழந்ததை சுட்டி காட்டிய செங்கோட்டையன்.
வரும் தேர்தலில் டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைக்கவில்லை என்றால், பாஜக – அதிமுக கூட்டணி தென் மாவட்டத்தில் பலத்த அடி வாங்கும், அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று அமித்ஷாவிடம் தெரிவித்து இருக்கிறார் செங்கோட்டையன். மேலும் எடப்பாடி என்கிற தனி நபரை விட திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதும் அதிமுக கட்சியின் எதிர்காலம் தான் எங்களுக்கு முக்கியம் என செங்கோட்டையன் தெரிவிக்க,
அதற்கு அமித்ஷா நீங்கள் சொல்கிற அனைத்தும் ஏற்று கொள்ள கூடிய விஷயம் தான், நிச்சயம் இதற்கு தீர்வு காணப்படும், நம்முடைய நோக்கம் திமுகவை வரும் 2026 சட்டசபை தேர்தலில் வீழ்த்த வேண்டும் என செங்கோட்டையனிடம் தெரிவித்த அமித்ஷா ,உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக சீனியர் தலைவர்களிடம் பேசுங்கள், எல்லாம் நல்லதே நடக்கும் என செங்கோட்டையனிடம் சிரித்த முகத்துடன் பேசி வழியனுப்பி வைத்து இருக்கிறார் அமித்ஷா.
இந்நிலையில் சுமார் டெல்லியில் 30 நிமிடம் நடந்த அமித்ஷா உடனான சந்திப்புக்கு பின்பு மகிழ்ச்சியுடன் செங்கோட்டையன் திரும்பி இருக்கிறார். அதே நேரத்தில் டெல்லியில் நடந்த அமித்ஷா – செங்கோட்டையன் சந்திப்பு நடந்த தகவல் எடப்பாடிக்கு சென்றதும் கடும் அப்செட்டில் சேலம் வீட்டில் இருந்து பலருக்கு தொலைபேசி மூலம் பேசி ஒரு வித பதற்றத்துடன் தகவல்களை எடப்பாடி தெரிந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

