இந்தியாவை குறைத்து மதிப்பிட்டு விட்டேன்…. சரணடைந்த டோனல் ட்ரம்ப்… கெத்து காட்டிய மோடி…

0
Follow on Google News

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக வரிகளை விதித்தால் இந்திய பங்குச்சந்தை மோசமான சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் யூகங்கள் தவறானவை என்பதை நிரூபித்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையானது இந்தியா-அமெரிக்கா உறவில் தற்காலிக விரிசலை உருவாக்கியது.

இந்த சூழலில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் சீனா சென்றிருந்தார். அங்கு சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தனித்தனியாக சந்திப்புகளை நடத்தினார். மூவரும் நட்புறவு பாராட்டியது சர்வதேச நாடுகளிடையே கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது.

சீனாவும், ரஷ்யாவும் அமெரிக்காவுக்கு சவால் தரும் எதிர் நாடுகளாக இருந்து வருபவை. ஒருகட்டத்தில் சீனாவுக்கு எதிராக இந்தியா முக்கிய நட்பு நாடாக அமெரிக்காவுக்கு திகழ்ந்து வந்த சூழலில், டிரம்ப்பின் நடவடிக்கை காரணமாக இந்தியா-சீனா-ரஷ்யா புது கூட்டணி உருவாகியுள்ளது. டிரம்ப்பின் வரி நடவடிக்கை இந்தியா என்ற முக்கிய நட்பு சக்தியை அமெரிக்கா இழக்கும் சூழலை உருவாக்கியுள்ளதாக அமெரிக்காவின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டோனல் ட்ரம்ப் கூடுதல் வரி விதிப்பது மூலம் இந்தியாவை சரணடையச் செய்யலாம் என டிரம்ப் எண்ணினாா். ஆனால் இந்தியா தனக்கென தனி பாரம்பரியத்தை கொண்டது. சுதந்திரமாக செயல்படும் இந்தியாவுக்கு வேறு நாடுகள் கட்டளையிட முடியாது என்பதை இந்தியா டிரம்புக்கு உணர்த்தியுள்ளது.

இந்நிலையில் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்றால் அமெரிக்காவுக்கு, இந்தியாவின் உதவி தேவை. ஆனால் டிரம்பின் வரி விதிப்பு இந்தியா – சீனாவை நட்பாக்கி விடும் என்று அமெரிக்காவின் அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் வெளியுறவு, உளவுப்பிரிவு அதிகாரிகள் பலரும் டிரம்புக்கு வார்னிங் கொடுத்து வருகின்றனர்.

முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், “வெள்ளை மாளிகை அமெரிக்க-இந்தியா உறவுகளை பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிவிட்டது. மோடியை ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கித் தூண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.இந்நிலையில், இந்தியாவுடனான உறவை மீண்டும் சீரமைக்கும் விதமான சமாதான கருத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்க பேச்சுவார்த்தை தொடர்கின்றன. இணக்கமான தீர்வை அடைவதில் இரு நாடுகளுக்கும் எந்த சிரமமும் இருக்காது என உறுதியாக நம்புகிறேன். எனது நண்பர் பிரதமர் மோடியுடன் அடுத்த வாரங்களில் பேசுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் குறித்த டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமா் மோடி வரவேற்பு தெரிவித்திருந்தாலும், இருநாடுகளிடையேயான வா்த்தக உறவு விரைவில் சீராகும் என எதிா்பார்ப்பது கடினம் என கூறப்படுகிறது.