சமீபத்தில் டெல்லி சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அங்கே அமித் ஷாவை சந்தித்ததாக சில ஊடகங்கள் பரபரப்பு செய்தியை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை உண்மையிலேயே செங்கோட்டையன் சந்தித்தாரா என்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில்,
மத்திய உள்துறை அமைச்சர் அமீத்சாவை செங்கோட்டையன் சந்திக்கவே இல்லை என்று உறுதிப்படுத்துகிறது மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள். அதாவது கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாக கூறப்படும் நிலையில், அன்று இரவு 11 மணிக்கு தான் அமித்ஷா தனது டெல்லி இல்லத்திற்கு வந்ததாகவும்,

வந்து உணவு சாப்பிட்டுவிட்டு அதன் பின்பு சுமார் 2 மணி நேரம் நேபாளில் நடக்கும் கலவரம் குறித்து உளவுத்துறை அதிகாரியிடம் தொடர்ந்து தொலைபேசியில் பேசி விவரங்களை தெரிந்து கொண்டதாகவும், அதன் பின்பு அவர் தூங்கச் சென்றதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் டெல்லி இல்லத்திற்கு வருவதற்கு முன்பு டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அமித்ஷா இருந்து இருக்கிறார்.
அப்போதும் செங்கோட்டையன் உட்பட எந்த ஒரு தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்களையும் அமித்ஷா அங்கே சந்திக்கவில்லை என பாஜக டெல்லி அலுவலகத்தில் இருந்து வரும் தகவல்கள் உறுதி படுகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாக வெளியான தகவல்களின் பின்னணியில் திமுக இருப்பதாகவும்,
அதிமுக பாஜக கூட்டணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் விதத்தில் செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தார் என்று திட்டமிட்டு ஒரு பொய்யான தகவல்களை திமுக ஆதர ஊடகங்கள் மூலம் திமுக பரப்பி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் திமுகவை வரும் 2026 சட்டசபை தேர்தலில் வீழ்த்திய ஆகவேண்டும் என்று அமித்ஷா சபதம் எடுத்துள்ள நிலையில்.
அதிமுக பாஜக கூட்டணிக்குள் எந்த பிளவும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக அமித்ஷா இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பீகார் தேர்தல் முடிந்ததும் தன்னுடைய பார்வையை முழுமையாக தமிழ்நாட்டு பக்கம் திருப்ப இருக்கும் அமித்ஷா தற்பொழுது பீகார் தேர்தலில் பிஸியாக இருந்து வருவதால், அடுத்து பிஹார் தேர்தல் முடிந்ததும் தமிழ்நாட்டில் முழு வீச்சில் களம் இறங்க இருக்கிறார்,
இந்த நிலையில் விரைவில் பாஜக தேசிய தலைவர் மாற்றம் நிகழ இருக்கும் நிலையில் பாஜக முன்னாள் மாநிலத்தில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் இந்த தகவல் தேசிய தலைமை அண்ணாமலைக்கு சமீபத்தில் தெரியப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் விரைவில் தேசிய அளவில் அண்ணாமலைக்கு முக்கிய பதவி, மேலும் பிகார் தேர்தல் முடிந்ததும் தமிழகம் பக்கம் திரும்பும் அமித்ஷா என வரும் செய்திகள் திமுகவை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

