வேலையின்மையை ஒழிக்கும் மோடி… ராகுல்காந்தியின் பொய் அம்பலம்… இதோ உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கை..

0
Follow on Google News

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவது, போன்று புதிய வேலைவாய்ப்பு விகிதம் மிக குறைவாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய பாஜக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்றைய இந்தியாவின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் வேலையின்மை தான் என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

ஆனால் இதெல்லாம் பொய் என்பது அம்பலம் ஆகியுள்ளது உலகப் பொருளாதார மன்றத்தின் அறிக்கையில் ஜி-20 நாடுகளிலேயே இந்தியாவில் மட்டும் தான் வேலையின்மை விகிதம் மிக குறைவாக உள்ளது என்று உறுதிப்படுத்துகிறது. மேலும் மத்திய பாஜக அரசு இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்காக பல அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த வரிசையில் 2015ல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் மூலம், பெரு நிறுவனங்கள் அல்லாத அல்லாத விவசாயம் மற்றும் சிறு , நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்களை வழங்குவது இதன் முதன்மை நோக்கமாக உள்ளது . திட்டத்தின் சலுகைகளை பெற தனி நபர்கள் முத்ரா கடனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தகுதி அளவுகோல்களை மனுவில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பயனாளிகளின் தகுதியை பொறுத்து அவர்கள் ₹ 10 லட்சம் வரை இந்த திட்டத்தின் கீழ் கடன்களை பெறலாம். வங்கிகள் தரும் கடனின் விதிமுறைகளிலிருந்து மாறுபட்ட திட்டமாகிறது இது. சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் வசதிகள், பிணையம் தேவையில்லை, செயலாக்க கட்டணங்கள் இல்லை,மேலும் மத்திய பாஜக மோடி அரசு அமேசான் மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுடன் பல்வேறு புத்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு சுமார் 5 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி இருக்கிறது,

மேலும் பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம் மூலம், புதிதாக வேலை தேடும் இளைஞர்களுக்கு இரண்டு தவணைகளில் ₹15,000 வரை ஊக்கத்தொகை வழங்கும், மேலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக முதலாளிகளுக்கு ஒரு புதிய ஊழியருக்கு மாதத்திற்கு ₹3000 வரை ஊக்கத்தொகை வழங்கபட்டு வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவில் வேலையின்மையை நிவர்த்தி செய்வதில் புது திட்டங்களும் பல முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஆனால் கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் இந்தியாவின் தூண்கள் என்று அழைக்கப்படக்கூடிய இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்யாமல் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காங்கிரஸ் அரசின் திறமையின்மையான ஆட்சியும், ஊழல் நிறைந்த நிர்வாகம் காரணமாக அன்றைய இளைஞர்களின் வேலைவாய்ப்பும் கூட பறிக்கப்பட்டன, ஆனால் அதன் பின்பு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக இன்று இளைஞர்களின் வாழ்வில் பிரகாசமான ஒரு எதிர்காலத்தை வழி வகுத்து கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.