கடந்த ஒரு வரமாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஒரு சிலர் திட்டமிட்டு அவரை டேமேஜ் செய்யும் நோக்கில், அண்ணாமலை மீது சேற்றை வாரி இறைப்பது போன்று வன்மத்தை கக்கி வருகிறார்கள், இது பாஜக ஆதரவாளர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மத்தியிலே கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜக வளர்ச்சி என்பது அண்ணாமலைக்கு முன்பு என்ன .? அண்ணாமலைக்கு பின்பு என்ன என்பது பற்றி சொல்லி தெரியவேண்டியது இல்லை.
ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நோட்டாவுக்கு கீழ் வாங்கி ஒரு காலத்தில் நோட்டா கட்சி என பாஜக கிண்டல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது திமுகவுக்கு மாற்று பாஜக தான் என கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 18 சதவிகித வாக்கு வாங்கிய நிரூபித்தவர் அண்ணாமலை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பே ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் ஒரு கர்வம் என்று சொல்லும் அளவுக்கு , எங்களை பார்த்தா டா நோட்டா கட்சி என்று கிண்டல் செய்தீங்க என்று பதிலடி கொடுக்கும் அளவுக்கு பாஜக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்து நடந்து வருவதை பார்க்க முடிந்தது.

இந்நிலையில் அண்ணாமலை ஒரு விவசாய நிலம் வாங்கியதை, குறிப்பிட்டு அவர் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு சிலர் இப்படி அண்ணாமலை மீது அவதூறு பரப்புவதில் பின்னணியில் யார் இருக்கிறார்.? ஏன் அவர்களுக்கு அண்ணாமலை மீது வன்மம் என்கிற தகவல் அரசல் புரசலாக வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் அண்ணாமலை மீது வன்மத்தை கக்குகிறவர்கள் அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில்,
அண்ணாமலை திமுக உடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை எந்த ஒரு பாஜக தொண்டர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்களால் ஏற்று கொள்ள முடியாததை பார்க்க முடிகிறது. அண்ணாமலை தனக்கென ஒரு பெயர சம்பாத்திச்சிட்டார் என்ற வன்மத்தில் தான் அண்ணாமலை பற்றி கண்டதை கக்குவது போன்று அமைத்துள்ளது அண்ணாமலை மீது வைக்கப்படும் விமர்சனம் அனைத்தும்.
மேலும் அண்ணாமலை திமுகவுடன் தொடர்பில் இருக்கிறார் என அண்ணாமலைக்கு எதிராக சுமார் 100 பதிவுகளை பதிவிடும் நபர்கள், திமுகவுக்கு எதிராக ஒரு பதிவை கூட போடாதது, என்னடா உங்கள் பித்தலாட்டம் என்று கேட்க தோன்றுகிறது. இந்நிலையில் பாஜகவில் இங்கே தனி மனித துதி பாட கூடாது, சிந்தாந்தமே முக்கியம் என ஒரு சிலர் பேசுவதெல்லாம் மறைமுகமாக, அண்ணாமலை வளர்ந்துகொண்டிருக்கிறாரே” என்கிற வயித்தெரிச்சலின் வெளிப்பாடு மட்டுமே என்கிறார்கள் பாஜக ஆதரவாளர்கள்.
2009 ல் அத்வானி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு பாஜக தோல்வியை தழுவியது, 2014 ல் மோடி பிரதமர் வேட்ப்பாளராக நிறுத்தப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றார், 2009 ல் பாஜகவிற்கு என்ன சித்தாந்தமோ 2014 லும் அதே சித்தாந்தம்தான், பிறகு என்ன வித்யாசம்? எப்படி மோடி வெற்றி பெற்றார்.? அத்வனி தோல்வியை தழுவினார் என்கிற கேள்வியை பாஜக ஆதரவாளர்கள் எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில் மோடியின் charisma பல புதியவர்களை பாஜக பக்கம் கொண்டுவந்தது… அத்வானி ஒன்றும் குறைந்தவர் இல்லை… ஆனால் மோடிக்கான acceptance அதிகம் இருந்தது…சித்தாந்தம் முக்கியம்… ஆனால் யார் அந்த சித்தாந்தத்தை பேசுகிறார் என்பது அதைவிட முக்கியம்… சரியான தலைவர் இல்லாமல் சித்தாந்ததை மட்டும் பேசி உலகில் எந்த கட்சியும் தேர்தல் அரசியலில் வென்றதில்லை என அண்ணாமலை எதிராக வன்மத்தை கக்கும் ஒரு சிலருக்கு பாஜக ஆதரவாளர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக ஒரு சிலர் வன்மத்தை கக்கி வரும் நிலையில் இவர்கள் பின்னனியில் உள்ளவர்களை பாஜக தலைமை அடையாளம் கண்டு தட்டி வைக்க வேண்டும் என பாஜக ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

