செங்கோட்டையனுடன் கைகோர்க்கும் SP வேலுமணி… திட்டத்தை மாற்றும் பாஜக… சிக்கலில் எடப்பாடி…

0
Follow on Google News

இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வந்தாலும், பாஜகவின் நீண்ட நாள் கனவான தமிழகம் மற்றும் மேற்கு வங்கமாக இரண்டு மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தற்பொழுது திமுக கூட்டணி மிக வலுவாகவும், அதே நேரத்தில் திமுகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் வலுவிழந்து இருப்பது தான்.

பாஜக என்கின்ற கட்சி இருப்பதே தமிழக மக்களுக்கு தெரியாமல் இருந்த நிலையில் பாஜக தலைவராக அண்ணாமலையை கொண்டு வந்து தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பாஜகவையும் பாஜக சின்னமான தாமரையும் கொண்டு சேர்த்தது பாஜக தலைமை, இந்த நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கின்ற ஒரே குறிக்கோளுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாஜக டெல்லி தலைமை.

பாஜக அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கு சென்றதுக்கு பின்னணி காரணங்களும் உண்டு, அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியில் துணை முதல்வர் உட்பட அதிகாரத்தில் பங்கு கொண்டு தமிழகத்தில் வலுவான அடித்தளத்தை அமைக்க வேண்டும் அதன் பின்பு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் இதுதான் பாஜகவின் முதல் நோக்கம்.

ஒருவேளை திமுக வெற்றி பெற்றாலும் இம்முறை சட்டமன்றத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக சார்பில் இடம்பெற வேண்டும் என்பது அடுத்த பிளான் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாஜகவை வலுப்படுத்தி 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அதிகரிப்பது, 2031-க்குள் பாஜக தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து ஆட்சியை அமைக்க வேண்டும்.

இதுதான் டெல்லியில் மிகப்பெரிய திட்டம் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் வரும் 2026ல் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்பது பிஜேபியின் எண்ணம், அந்த பிஜேபியின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் தான் செங்கோட்டையன் தற்பொழுது பேசி வருகிறார்.

இந்த நிலையில் அதிமுகவை ஒருங்கிணைத்தால் மட்டுமே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என டெல்லி பாஜக நன்கு உணர்ந்துள்ளது. ஒருவேளை அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி தடையாக இருந்தால் அவரை தூக்கி விட்டு வேறு ஒரு தலைமையை நிரூபித்து தேர்தலை சந்தி ப்பது குறித்தும் பாஜக டெல்லி தலைமை ஆலோசித்து வருவதாக தகவல் வருகிறது.

அதே நேரத்தில் தற்பொழுது எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர் குரல் எழுப்பி இருக்கும் வேளையில், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் ஆன எஸ் பி வேலுமணி, தங்கமணி உட்பட்டோர் செங்கோட்டையன் குரலுக்கு தாங்கள் ஆதரவாக இருக்கின்றோம் என்று பாஜகவுக்கு மறைமுகமாக செய்தியை அனுப்பியதாக தகவல் வெளியாகிறது.

அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி சமூகத்தை சேர்ந்த செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி இவர்களில் ஒருவரை அதிமுகவின் தலைமையில் அமர வைத்து வரும் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது, மேலும் எஸ்.பி வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையில் சமீபகாலமாகவே உரசல் இருந்து வரும் நிலையில், அவர் பாஜகடனும் ஆர்எஸ்எஸ் உடனும் மிக நெருக்கமாக இருந்து வருவதாக தகவல் வெளியாகிறது.