அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய முயற்சியால் தான் இந்தியா பாகிஸ்தான் இடையில் நடந்த போர் நிறுத்தப்பட்டது என்று தம்பட்டம் அடித்து வந்தார், ஆனால் இதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை, இருந்தாலும் தொடர்ந்து இப்படி இந்தியா பாகிஸ்தான் போர் தன்னுடைய முயற்சியால் தான் நின்றது என்று அமெரிக்க அதிபர் ட்ரம் பேசி வந்ததின் பின்னணியில், அவர் அமைதிக்கான நோபல் பரிசை வாங்க வேண்டும் என்கின்ற ஒரு பேராசை தான் என்கின்ற என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது அவருடைய ஜனநாயக கட்சியின் சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற மிக குறுகிய காலத்திலேயே அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். அந்த வகையில் அதேபோன்று தற்பொழுது 79 வயதான ட்ரம் அமைதிக்கான நோபல் பரிசை பெற வேண்டும் என்பதற்காகத்தான் பல குட்டி கரணம் போட்டு வருகிறார்.

இதற்கு முன்பு வட கொரிய அதிபரை சந்தித்து அமைதி பேச்சு வார்த்தை நடத்தினேன் என்று அமைதிக்கான நோபல் பரிசு வாங்க முயற்சித்தார், ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதேபோன்று ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த முயற்சி செய்து அமைதிக்கான நோபல் பரிசை பெற்று விடலாம் என்று முயற்சித்தார் அதுவும் தோல்வியில் தழுவியது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்பின் வலியுறுத்தல் காரணமாக பல தலைவர்கள் சிபாரிசு செய்து வரும் நிலையில், பல தலைவர்கள் சொல்வதாலேயே நோபல் பரிசு வழங்க முடியாது என்று நோபல் கமிட்டி தெரிவித்து இருக்கிறது. நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் சாதனை மற்றும் அமைதிக்காக அவர்கள் ஆற்றிய பங்கின் அடிப்படையிலேயே நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் உள்ளிட்ட தலைவர்கள் தன்னை நோபல் பரிசுக்காக பரிந்துரைப்பதாக ட்ரம் சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் நார்வே நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட நார்வே நோபல் கமிட்டி உறுப்பினர்கள், அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்பட கூடியவர்கள். அந்த வகையில் எத்தனை தலைவர்கள் சிபாரிசு செய்தாலும் இந்த கமிட்டி தீவிரமாக ஆராய்ந்து நோபல் பரிசு தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த நிலையில் வரும் 2025 ஆண்டுக்கான நோபல் அமைதிக்கான நோபல் பரிசு ஒரு அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பல வெளிநாட்டு தலைவர்கள் ஆதரவும் கோரிக்கையும் இருந்தாலும் கூட நோபல் பரிசு கமிட்டி அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தேர்வு செய்யாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவை மிரட்டி நோபல் பரிசு வாங்கி விடலாம் என்கிற ட்ரம்பின் முயற்சியும் தோல்வியை தழுவி இருக்கிறது. அதாவது இந்தியா – பாக்கிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என ட்ரம்ப் சொன்னதை பாக்கிஸ்தான் ஏற்று கொண்டது, ஆனால், இந்தியா ஏற்று கொள்ளவில்லை, பாக்கிஸ்தான் எங்களிடம் கெஞ்சியதால் தான் போரை நிறுத்தினோம் என இந்தியா தெரிவித்தது.
இருந்தும் இந்தியா மீது அதிக வரி விதிப்பேன் என ட்ரம்ப் மிரட்டலுக்கு இந்தியா அடிபணியவில்லை, அந்த வகையில் இந்தியா மனசு வெச்சுருந்தால் ட்ரம்ப் க்கு நோபல் பரிசு கிடைத்து இருக்கும், இருந்தும் பல குட்டி கரணம் போட்டு ட்ரம்ப் நோபல் பரிசு விவகாரத்தில் முக்குடையப்பட்டது தான் மிச்சம்.

