அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று பத்து நாள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதும் டெல்லி விரைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழகம் திரும்பினார் செங்கோட்டையன்,
இந்த நிலையில் செங்கோட்டையன் உடனே டெல்லி சென்று அமித்ஷாவை சந்திப்பதற்கும், மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கழக குரல் எழுப்பதற்கும் பின்னணியில் யார் என்கின்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், செங்கோட்டையன் பின்னணியில் எஸ்பி வேலுமணி தான் உள்ளார் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது.

நீங்கள் துணிந்து அடித்து விளையாடுங்க அண்ணன் நாங்கள் இருக்கிறோம் என்று செங்கோட்டையன் பின்னால் இருந்து எஸ் பி வேலுமணி கொடுத்த தைரியம்தான் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குரல் கொடுத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், கட்சியில் தன்னை பொதுச் செயலாளராக நிலை நிறுத்துவதற்கும், பக்க பலமாக இருந்தது எஸ்பி வேலுமணி.
மேலும் எஸ்பி வேலுமணிக்கும் பாஜகவுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஆர்எஸ்எஸ் உடன் எஸ்பி வேலுமணிக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு வித பயத்தை கொடுத்தது, இதனாலேயே எஸ்பி வேலுமணிக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையிலான மறைமுக ஒரு மோதல் போக்கு இருந்து வந்திருந்ததாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இதன் காரணமாகவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்கின்ற எஸ்பி வேலுமணியின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளாததால், அதிமுகவிற்கு சரியாக அவர் எஸ் பி வேலுமணி தேர்தல் பணியை செய்யவில்லை என்கின்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அதனால் தான் மூன்றாவது இடத்திற்கு அதிமுக கொங்கு மண்டலத்தில் தள்ளப்பட்டது என்றும்,
குறிப்பாக எஸ்பி வேலுமணிக்கும் சொந்த தொகுதியான தொண்டமுத்தூர் தொகுதியில் கூட பாஜக 56,000 வாக்குகள் வாங்குவதற்கு எஸ்பி வேலுமணி பாஜகவிற்கு உதவி செய்வதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை எட்டிய போது, நடந்த எஸ்பி வேலுமணி மகன் திருமணத்திற்கு செங்கோட்டையனை வலு கட்டாயமாக அழைத்து முக்கியத்துவம் கொடுத்தார் எஸ் பி வேலுமணி.
இது அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரானவையாகவே அமைந்தது, மேலும் எஸ்.பி வேல்மணி தமிழக முழுவதுமே அதிமுகவுக்குள் தனக்கான ஒரு ஆதரவாளர் வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார், அதே நேரத்தில் அதிமுகவில் எஸ் பி வேலுமணிக்கு என தனி செல்வாக்கு உள்ளது, இந்த நிலையில் செங்கோட்டையன் டெல்லி செல்வதற்கும் அமித்சாவை சந்திப்பதற்கும் ரூட் போட்டு கொடுத்தது எஸ்பி வேலுமணி தான் என்றும், அந்த வகையில் செங்கோட்டையனுக்கு மறைமுகமாக முழு ஆதரவாக எஸ் பி வேலுமணி செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாஜக முழு ஆதரவு எஸ்பி வேலுமணிக்கும் உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

